Published : 21 Dec 2018 08:56 AM
Last Updated : 21 Dec 2018 08:56 AM
புலந்த்ஷெஹரில் நடைபெற்ற கலவர வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான பசுவதையில் 3 உண்மை குற்ற வாளிகள் கைதாகி உள்ளனர். இத னால், இவ்வழக்கில் முன்பு உ.பி. போலீஸாரால் கைதான நால்வர் அப்பாவிகள் என விடுவிக்கப்பட உள்ளனர்.
புலந்த்ஷெஹரின் மஹாவ் கிராமத்தின் கரும்பு வயலில் டிசம்பர் 3-ம் தேதி காலை, பசுமாடு களின் எலும்புகள் கண்டெடுக்கப் பட்டன. பசுக்களை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேரின் பெயர்களுடன் புலந்த்ஷெ ஹர் மாவட்ட பஜ்ரங்தளம் அமைப் பாளரான யோகேஷ் ராஜ் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதில், சாஜீத், ஷெரீபுத்தீன், படே கான், ஆசிப் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுடன் இரண்டு சிறுவர்களும் அழைத்து விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த கலவர வழக்கை விசாரித்து வரும் உ.பி.யின் எஸ்ஐடி சிறப்பு படையி னருக்கு நேற்று முன்தினம் இரவு கிடைத்த தகவலை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளன. சயானா கிராமத்தின் நதீம், ரெய்ஸ், காலா ஆகிய அந்த மூவரிடம் கள்ளத் துப்பாக்கி மற்றும் பசுமாடுகளை வெட்டிய கூர்மையான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த மூவரும் டிசம்பர் 2-ம் தேதி இரவு சயானாவில் பசுமாடுகளை வெட்டி அதன் எலும்புகளை மஹாவ் கிராம வயலில் வீசிய தாக ஒப்புக் கொண்டுள்ளனர். இவர்களை சம்பவ தினத்தன்று மஹாவ் கிராமத்தின் ஹாரூன் என்பவர் மறைத்து வைத்து காப்பாற்றியதாகவும் உ.பி. போலீ ஸார் கூறியுள்ளனர். இதனால், முன்பு கைதான நால்வரும் நிரபராதிகள் எனக் கருதி அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கலவர வழக்கில் தேடப்பட்டு வரும் பஜ்ரங் தளம் அமைப்பினர் மற்றும் இதர குற்றவாளிகள் 23 பேரின் வீடு களில் தேடல் நோட்டீஸ் ஒட்டப் பட்டுள்ளது. இவர்கள் இருநாட் களில் சரணடையவில்லை எனில் அவர்களது சொத்துகள் ஏலம் விடப்படும் எனவும் அதில் குறிப் பிடப்பட்டுள்ளது. இதனால், அனைத்து குற்றவாளிகளும் நீதி மன்றத்தில் சரணடைய திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளி யாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT