Published : 23 Dec 2018 11:17 AM
Last Updated : 23 Dec 2018 11:17 AM
உபி பாஜகவின் எம்எல்சியான புக்கல் நவாப் இருதினங்களுக்கு முன் ஹனுமர் ஒரு முஸ்லிம் எனக் கருத்து கூறி இருந்தார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்மாநிலத்தின் தியோபந்த் மதரஸா வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து தாரூல் உலூம் மதரஸாவின் ஃபத்வா பிரிவு முப்தியான அர்ஷத் அகமது பரூக்கீ கூறும்போது, ‘மதங்களின் மீது அதற்கானப் பொறுப்புகள் கொண்டவர்கள் மட்டுமே பேச வேண்டும். அப்போது அவர்கள் பிரச்சனையை தீரஆலோசித்த பின் தனது கருத்துக்களை கூறவேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.
புக்கல் பிரச்சனையில் மேலும் முப்தி அர்ஷத் கூறுகையில், ‘ஹனுமரை முஸ்லீம் எனக் கூறியமைக்கு புக்கல் நவால் இந்து மற்றும் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனவும் வலியுறுத்தி உள்ளார்.
ரஹ்மான், புர்கான் போன்ற முஸ்லிம் பெயர்களின் உச்சரிப்பு ஹனுமன் பெயரிலும் இருப்பதால் உண்மையில் அவர் ஒரு முஸ்லீம் என புக்கல் நவாப் தனது கருத்தி கூறி இருந்தார். இதனால், கடந்த நவம்பர் 27-ல் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹனுமர் ஒரு தலித் என தொடங்கி சர்ச்சை தொடர்ந்தது.
இதையடுத்து ஹனுமரை, தம் ஜாட் சமூகத்தவர் என உபி மாநில அமைச்சர் லஷ்மி நாராயண் சவுத்ரியும், ஆதிவாசி என பாஜகவின் டெல்லி மக்களவை உறுப்பினர் உதித்ராஜும் கருத்து கூறி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT