Last Updated : 04 Dec, 2018 05:25 PM

 

Published : 04 Dec 2018 05:25 PM
Last Updated : 04 Dec 2018 05:25 PM

பாகிஸ்தான் ஜேஇஎம் தலைவர் மசூத் அசார் அடுத்த துல்லியத் தாக்குதலில் கொல்லப்படுவார்: உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் காட்டம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டால் டெல்லியிலிருந்து காபூல் வரை பழிக்குப் பழிக்கு தயாராகுங்கள்,  சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்காவிட்டால் முஸ்லிம் பெருமக்கள்  தியாகத்துக்குத் தயாராக இருக்கிறார்கள் என்று பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் விடுத்த எச்சரிக்கைக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் விவகாரத்தில் தலையிட்டு அச்சுறுத்தினால் மசூத் அசார் அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கில் கொல்லப்படுவார் என்று தெரிவித்துள்ளார். இவரைப் போன்ற பயங்கரவாதிகள் தீர்த்துக் கட்டப்படுவார்கள். அவருடைய எஜமானர்களும் அவரைக் காப்பாற்ற முடியாது என்று ஏ.என்.ஐ. செய்தி யோகி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

பதான்கோட் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மசூத் அசார் உள்ளார் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவர் ராமர் கோயில் குறித்து ஒலி வடிவ கோப்பு ஒன்றை வெளியிட்டார், அதில், பாபர் மசூதி இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டால், டெல்லி முதல் காபூல் வரை இதற்கு பழிதீர்க்க இளைஞர்களே தயாராகுங்கள் என்றும் பாபர் மசூதி இடம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில் முஸ்லிம் பெருமக்கள் தியாகத்துக்குத் தயாராக வேண்டி வரும் என்றும் மிரட்டியிருந்தார்.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத், மசூத் அசார் அடுத்த துல்லியத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களால் மசூத் அசார் கொல்லப்படுவார் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x