Published : 15 Nov 2018 08:09 AM
Last Updated : 15 Nov 2018 08:09 AM
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவான் விண் வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்3- டி2 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அதி நவீன திறன் கொண்ட தகவல் தொடர்புக்கான ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை ஜிஎஸ்எல்வி மார்க்3 - டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக, ஜிஎஸ்எல்வி மார்க்3 - டி2 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், இரண் டாவது நிலையில் திரவ எரிபொரு ளும் நிரப்பப்பட்டது. மூன்றாவது நிலையில் கிரையோஜெனிக் என் ஜின் பொருத்தப்பட்டது.
இந்த ராக்கெட் 4 டன் எடை கொண்ட செயற்கைகோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தும் திறன் கொண்டது.
3,423 கிலோ எடை கொண்ட ஜிசாட்-29 செயற்கைகோளில் தக வல் தொடர்புக்கு பயன்படுத்தப் படும் அதிநவீன சக்தி கொண்ட ‘கா.கு.பாண்ட்’ டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த செயற்கைகோளின் ஆயுள் காலம் 10 ஆண்டுகளாகும்.
தொலைதூரத்தில் உள்ள தகவல் தொடர்புத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு க்யூவி என்ற நவீன தொலை தொடர்பு கருவி, துல்லியமாக படம் எடுக்க அதி நவீன கேமராக்கள் இந்த செயற்கை கோளில் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த செயற்கைகோள் மூலம் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங் களின் கிராம வள மையங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் விரைவாக இணையதள சேவையைப் பயன்படுத்த உதவும்.
இந்த செயற்கைகோளை விண் ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர மாக ஈடுபட்டு வந்தனர். செயற்கை கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுன்டவுன் நேற்று முன்தினம் பிற்பகல் 2.50 மணிக்கு தொடங் கியது.
26 மணி நேரம் 18 நிமிடம் கவுன்டவுன் முடிந்தவுடன் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து சரியாக நேற்று மாலை 5.08 மணிக்கு செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.
இதையடுத்து, திட்டமிட்ட படி 16 நிமிடம் 43 நொடிகளில் வெற்றிகரமாக சுற்று வட்டபாதை யில் நிலைநிறுத்தப்பட்டது.
விஞ்ஞானிகள் ஆரவாரம்
விஞ்ஞானிகள் கைதட்டி தங் களது மகிழ்ச்சியை வெளிப்படுத் தினர். ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கியும், கட்டியணைத்தும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண் டனர்.
ஜிசாட்-29 செயற்கைகோள் இந்த ஆண்டில் இஸ்ரோ விண் ணில் செலுத்தும் 5-வது செயற்கை கோளாகும். தொலைதொடர்புக் காக இஸ்ரோ அனுப்பியுள்ள 33-வது செயற்கைகோள் ஜிசாட்-29. இதுவரை இஸ்ரோ விண் ணில் ஏவிய செயற்கைகோள்களில் ஜிசாட்-29 அதிக எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘ஜிசாட்-29 செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி மார்க்3 டி2 ராக்கெட்டை வெற்றிகர மாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது நெஞ் சார்ந்த வாழ்த்துகள். இந்திய மண் ணில் இருந்து இதுவரை இல்லாத வகையில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப் பட்டுள்ளது. இந்த செயற்கைக் கோள், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் தொடர்பு மற் றும் இணையதள சேவையை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT