Published : 16 Nov 2018 08:39 AM
Last Updated : 16 Nov 2018 08:39 AM

இலவச மருத்துவமனையாக மாறிய மசூதி: ஹைதராபாத்தில் அனைத்து மதத்தினருக்கும் சிகிச்சை

ஹைதராபாத்தில் உள்ள மஜ்ஜித்-இ-இஷாக் மசூதி ஏழைகளின் நலனுக்காக மருத்துவமனையாக மாறியுள்ளது. இங்கு ‘ஹெல்பிங் ஹேண்ட்’ என்ற தொண்டு நிறு வனம் சார்பில் அனைத்து மதத் தினருக்கும் இலவசமாக மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மசூதியின் தரைத் தளத்தில் 1,000 சதுர அடியில் மருத்துவமனை தொடங்கப்பட்டுள் ளது. இங்கு அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன. விரைவில் விபத்து சிகிச்சை, மகப்பேறு, பிசியோ தெரபி வசதிகளும் தொடங்கப்பட உள்ளன.

தொண்டு நிறுவன செயல் மேலாளர் முஸ்தபா அஸ்கரி கூறும் போது: “இந்த மசூதியை தேர்ந் தெடுத்ததின் காரணம், இங்கு ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் வசித்து வருகின்ற னர். ஏழைகள் எந்த மதத்தவரானா லும் அவர்களுக்கு இலவசமாக மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம். தினமும் 40 முதல் 50 பேர் மருத்துவ சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களுக்கு நாங்கள் போக்குவரத்து வசதி களையும் செய்து தருகிறோம்.

இங்கு பணியாற்றும் மருத் துவர்கள், செவிலியர்கள் அனை வரும் இலவசமாக சேவை செய்து வருகின்றனர். முதலில் இங்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்படும். அதன் பின்னர் நாங்களே சம்பந்தப்பட்ட வர்களை அந்த நோயின் தன்மைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் கொண்டு போய் சேர்க்கிறோம்” என்றார்.

கடந்த 13 ஆண்டுகளாக ஹெல்பிங் ஹேண்ட் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் ஏழைகளுக் காக 30 மருத்துவ மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x