Published : 27 Nov 2018 11:43 AM
Last Updated : 27 Nov 2018 11:43 AM
கடந்த ஆகஸ்ட் வரை மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிவந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அப்ராஜிதா சாரங்கி இன்று பாஜகவில் இணைந்தார்.
அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றதை அடுத்து அரசியலில் பணியாற்ற அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று காலை, புதுடெல்லியில் உள்ள பாஜக தலைவர் அமித் ஷா வீட்டிற்கு சாரங்கி வந்தார். அங்கு பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அவர் பாஜக கட்சியில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜகவின் ஒடிசாத் மாநில தலைவர் பசந்த் பண்டா ஆகியோர் உடனிருந்தனர்.
நாளை ஒடிசாவிற்குத் திரும்பும் அப்ராஜிதா சாரங்கிக்கு அம்மாநில பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் இணைந்து வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் இணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த சாரங்கியின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவடைந்துவிட்டதால் தான் தன்னுடைய பணியை இனி அரசியலில் தொடரப் போவதாக அவர் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT