Published : 12 Nov 2018 04:55 PM
Last Updated : 12 Nov 2018 04:55 PM
சத்தீஸ்கரில் இன்று காலைமுதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 100 வயது பாட்டி ஒருவரும் வந்து வாக்களித்தார்.
சத்தீஸ் மாநிலத்தில் முதற்கட்டமாக நடைபெறும் இத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதில் 12 இடங்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கானவை. இதில் ஒரு இடம் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கானது.
தோர்னாபால் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கே வந்து வாக்களித்த மூதாட்டியின் பெயர் விஸ்வாஸ். வாக்குச்சாவடிக்கு அருகிலேயே இவரது வீடு உள்ளது. எனினும் வயது முதிர்வின் காரணமாக உடல் தளர்ந்துள்ளது.
உடல்நிலை சற்று மோசமான இந் நிலையிலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் தனது மகனின் உதவியோடு வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை இன்று அவர் பதிவு செய்தார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 20 அன்று நடைபெற உள்ளது.
இன்று தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் உள்ள ஒற்றுமையை கூர்ந்து கவனித்தால், அவை யாவும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம்உள்ள பிரச்சினைக்குறிய பாஸ்டர் மண்டலத்தில் அமைந்துள்ளவை என்பது தெரியவரும்.
தேர்தல் பணிகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் தெரிவித்ததாவது:
இத்தேர்தலில் 900 தேர்தல் பணியாளர்கள் ஹெலிகாப்டரில் கொண்டுபோய் பத்திரமாக வாக்குச்சாவடி பகுதிகளில் இறக்கப்பட்டார்கள். 16,500 தேர்தல் பணியாளர்கள் சாலை வழியாகவே எந்தவித இடையூறுகளும் இன்றி வாக்குச்சாவடிக்கு வந்துசேர்ந்தனர். அமைதியான தேர்தல் நடத்த அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்.
இன்று 18 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அவை அனைத்தும் இடதுசாரிகளால் பாதிக்கப்பட்ட இடங்களாகும். இந்த 18 தொகுதிகளிலும் பாதுகாப்புப் பணிகளை இரு பிரிவாக பிரித்து சிறப்புப் பாதுகாப்பு படையினரால் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 18 ஆண்டுகளில் முதன்முதலாக அங்கு துணை ராணுவப் படைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மொத்த தொகுதிகளிலும் 53 வாக்குச்சாவடிகளிலும் தொழில்நுட்பக் காரணங்களால் தாமதமாகத் தொடங்கியபோதிலும், 100 சதவீதம் வாக்குச் சாவடிகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் நின்று அமைதியாக முறையில் மக்கள் வாக்களித்து வருகிறார்கள்.
இவ்வாறு இந்திய தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இம்மாதம் தேர்தல் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT