Last Updated : 30 Nov, 2018 04:06 PM

 

Published : 30 Nov 2018 04:06 PM
Last Updated : 30 Nov 2018 04:06 PM

பாஜகவின் பழிவாங்கும் படலமே அமலாக்கத்துறை சோதனை: முன்னாள் மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

தன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, சம்மன் அனுப்பியது அனைத்தும் பாஜகவின் பழிவாங்கும் படலத்தின் நடவடிக்கைகள் என்று தெலுங்கு தேசக் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒய்எஸ் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

நிதி முறைகேடுகளில், பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சவுத்ரியின் வீட்டு வளாகத்தில் புலனாய்வுப் பிரிவு சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தியது.அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை சவுத்ரிக்கு 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சம்மன்களை அனுப்பியது.

சோதனை நடவடிக்கையின்போது போலி நிறுவனங்கள் பெயரில் பதிவுசெய்துள்ளதாக, பெராரி, ரேஞ்ச் ரோவர், பென்ஸ் போன்ற உயர்ரக கார்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். பண மோசடி தடுப்புச் சட்டம், 2002-ன்படி இவ்வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சவுத்ரி மீது எந்தவிதமான கட்டாய நடவடிக்கைகளும் அமலாக்கத்துறை மேற்கொள்ளக்கூடாது என்று இன்று தெரிவித்துள்ளது. மேலும் அவர் அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கை

இதுகுறித்து ஊடகங்களிடம் இன்று பேசிய சவுத்ரி கூறுகையில், ''தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்தும் பாஜகவின் தூண்டுதலின்பேரில் இது நடந்துள்ளது. போலீஸாரின் பழிவாங்கும் நடவடிக்கையால் நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன்'' என்று தெரிவித்தார்.

அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சவுத்ரி மறுத்தார். அனைத்து நிறுவனங்களும் என்னுடையதுதான். இதில் போலி என்பதே இல்லை. 

இந்நிறுவனங்கள் முழுக்க முழுக்க சட்டம், விதிமுறைகள்  மற்றும் அனைத்து ஒழுங்குமுறைகளிலும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x