Published : 30 Nov 2018 08:40 PM
Last Updated : 30 Nov 2018 08:40 PM
ராமர் கோயில் இங்குதான் கட்டப்படவுள்ளது’ என்பதற்கான இந்தி வாசகமான "Mandir yahi banega” என்பதுடன் ராமஜென்ம பூமி இடம் கூகுள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று விஸ்வ இந்து பரிஷத் முதல் இந்து அமைப்புகள் களத்தில் இறங்கியுள்ளன, இந்நிலையில் உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் நம்பர் 1 கூகுள் வரைபடத்தில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் இங்கு கட்டப்படுகிறது என்ற வாசகம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கூகுள் வரைபடத்தைத் திறந்து ராம் ஜென்ம பூமி என்று தேடினால் ‘மந்திர் யஹி பனேகா’ என்ற வாசகத்துடன் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி இடத்தைக் காட்டும்.
நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு:
பாபர் மசூதி-ராம ஜென்மபூமி விவகாரம் என்று அரசியல் வட்டாரங்களில் அழைக்கப்படும் இடம் பற்றிய விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
கோர்ட்டில் இருக்கும் விவகாரம் குறித்த ஒன்று கூகுள் வரைபடத்தில் வந்தது எப்படி என்று கூகுளிடம் கேட்ட போது, பயனாளர்கள் வரைபடத்தை எடிட் செய்யலாம் அப்படி வந்ததுதான் இது என்று பதில் அளித்தது.
ஆனால் அந்த வார்த்தைகளையும் அடையாள்த்தையும் நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, எனவே இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது என்று கூகுள் கூறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT