Last Updated : 24 Nov, 2018 02:10 PM

 

Published : 24 Nov 2018 02:10 PM
Last Updated : 24 Nov 2018 02:10 PM

கர்நாடகாவில் கால்வாயில் பஸ் கவிழ்ந்து 15 பேர் பலி

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் கால்வாயில் தனியார் பஸ் இன்று நண்பகலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 15 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

மாண்டியா மாவட்டம், பாடவபுரா தாலுகாவில் உள்ள கனகமாரடி கிராமத்தில் காவிரி நீர் பாயும் மிகப்பெரிய வி.சி.கால்வாய் உள்ளது. தனியார் பஸ் ஒன்று பாண்டவபுரத்தில் இருந்து மாண்டியா நகர் நோக்கி வந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் கால்வாய்க்குள் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. கால்வாய் ஆழமானது, அகலமானது என்பதால், பஸ் மூழ்கியது.

இதைப் பார்த்த கிராமமக்கள் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பஸ்ஸில் எத்தனைப் பேர் பயணித்தனர் என்பது தெரியவில்லை. முதல்கட்ட தகவலின்படி 20 பேர்வரை நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பஸ்ஸில் பயணித்தவர்கள் பெரும்பாலும் பள்ளி மாணவர்கள் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்த விபத்து குறித்து போலீஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘‘பஸ்ஸில் எத்தனைப் பேர் பயணித்தார்கள் என்பது தெரியவில்லை. பஸ் முழுமையாக மீட்கப்பட்ட பின்புதான் பலியான விவரங்கள் தெரியவரும். இப்போதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன’’ எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே பஸ் கால்வாயில் விழுந்தவுடன், பஸ்ஸில் இருந்து பள்ளி மாணவர் ஒருவர் பஸ்ஸில் இருந்து வெளியே குதித்து நீந்தி உயிர் தப்பினார் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து நடந்த இடத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x