Published : 13 Nov 2018 08:35 AM
Last Updated : 13 Nov 2018 08:35 AM
தெலங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 54,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ம் தேதி 119 சட்டப்பேர வைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற் கான தேர்தல் விதிமுறையை நேற்று அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன் படி, நேற்று தொடங்கிய வேட்பு மனு தாக்கல் வரும் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 22-ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும்.
இதனை தொடர்ந்து, வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப் பட்டு 22-ம் தேதி மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. வரும் டிசம்பர் 5-ம் தேதி மாலை 5 மணி வரை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யலாம். டிசம்பர் 7-ம் தேதி காலை 7 மணிக்கு 32,791 மையங்களில் வாக்குப்பதிவு தொடங்குகிறது. பின்னர் டிசம்பர் 11-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மொத்தம் உள்ள 119 தொகுதி களில், 19 எஸ்சி தொகுதிகளும் 12 எஸ்டி தொகுதிகளும் அடங்கும். தேர்தல் அறிவிப்பு வெளியானதும் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இம்முறை 2.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 54 ஆயிரம் போலீஸாரும் 275 கம்பெனி துணை ராணுவமும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறது.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 9 மாதங்களுக்கு முன்னரே மாநில முதல்வர் கே. சந் திரசேகர ராவ் ஆட்சியை கலைத் தார். ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி உடனடியாக 107 வேட் பாளர்களை அறிவித்ததால், அவர் கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் கடந்த ஒரு மாதத் துக்கும் மேலாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் கட்சி கள், தெலங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகள் இணைந்து ‘மெகா கூட் டணி’ அமைத்து களத்தில் இறங்கு கின்றன. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை யில் இழுபறி நீடித்து வருகிறது.
பாஜக தனித்து போட்டியிடு கிறது. அக்கட்சியின் மாநில தலைவர் லட்சுமண், நேற்று காலை முஷீராபாத் தொகுதி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். இவருடன் மத்திய அமைச்சர் ஹன்ஷ்ராஜ் தாஹீர், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் எம்பியுமான பண்டாரு தத்ராத்ரய்யா மற்றும் பலர் உடன் இருந்தனர். மேலும் பல பாஜக வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் அதன் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில், ஹைதராபாத்தில் உள்ள தலைமை கட்சி அலுவலகத்தில் 107 தொகுதி வேட்பாளர்களுக்கு பி-பாரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக, கே.சந்திரசேகர ராவ், அலு வலக வளாகத்தில் உள்ள தெலங் கானா தாய் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT