Published : 25 Aug 2014 03:04 PM
Last Updated : 25 Aug 2014 03:04 PM

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை: ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட 218 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட் டுள்ளன என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், 1993- முதல் 2009 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட சுரங்க உரிமங்களை ரத்து செய்துள்ளது.

நாட்டில் நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு சுமார் 1.86 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய தலைமைத் தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நிலக்கரி சுரங்கத் தொழிலில் முன் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளதாகவும், சில நிறுவனங்கள் சுரங்கப் பணிகளை பல ஆண்டு களாகத் தொடங்காமல் இருப்ப தாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இவ்வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்தது. கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு, இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் வந்தது. இதுதொடர்பாக பொதுநல வழக் குகளும் தொடரப்பட்டன.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் நீதிபதிகள் மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இவ்வழக்கின் தீர்ப்பை திங்கள்கிழமை வெளி யிட்டது. மொத்தம் 165 பக்கம் உள்ள தீர்ப்பில், “நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டுக் குழுவின் செயல் பாடுகள் நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும் இல்லை. வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் ஏதும் சுரங்க ஒதுக்கீட்டில் பின்பற்றப்பட வில்லை. தேசத்தின் சொத்து நியாயமற்ற வகையில் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. 1993-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதிக்குப் பிறகு அளிக்கப்பட்ட இந்த சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், அதன் பின்விளைவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பான மேலும் ஒரு விசாரணை வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம், மிகக் குறைந்த விலையில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக, பெரிய மின்திட்டங்களுக்கு (அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட்ஸ்-யுஎம்பிபி) ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படமாட்டாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அந்த திட்டங் களுக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

இரு ஆட்சியிலும்..

கடந்த 1993-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட சுரங்க ஒதுக்கீடு களை சட்டவிரோதமானவை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள் ளது. இதில், கடந்த 1998 முதல் 2004-ம் ஆண்டு வரை பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணியும், 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் ஆட்சியில் இருந்தன.

இந்த சுரங்கங்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஒடிஸா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x