Published : 23 Aug 2014 10:16 AM
Last Updated : 23 Aug 2014 10:16 AM
சிவசேனா கட்சியை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது.
சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்பி ராஜன் விசாரே கடந்த ஜூலை 17-ம் தேதி டெல்லியில் உள்ள மகாராஷ்டிர பவனில் தங்கி இருந்தார். அப்போது ரமலான் நோன்பில் இருந்த ஐஆர்சிடிசி ஊழியருக்கு கட்டாய மாக உணவை திணித்ததாக சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கரீப் நவாஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு பொதுநல வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், “ரமலான் நோன்பில் இருந்த ஊழியருக்கு உணவை திணித்த சிவசேனா எம்பி ராஜன் விசாரே உள்ளிட்ட அக்கட்சியின் 11 எம்பி-க்களை தகுதி நீக்கம் செய்ய மக்களவை தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவருக்கு உத்தரவிட வேண்டும். சிவசேனா கட்சிக்கு முழுமையாக தடை விதிக்க தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இம்மனு டெல்லி உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்சய் ஜெயின் ஆஜராகி, “இந்த வழக்கில் கட்டாயமாக உணவு திணிக்கப் பட்டதாக கூறப்படும் ஊழியர் அர்ஷாத் ஜுபைர் போலீஸில் எந்த புகாரும் அளிக்கவில்லை. மேலும், மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு ஏற்கனவே தனது நிலையை அறி வித்துள்ளது. எனவே, இம்மனுவை தள்ளு படி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார். இதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT