Published : 03 Nov 2018 10:08 AM
Last Updated : 03 Nov 2018 10:08 AM

திருப்பதி எஸ்பியாக அன்புராஜன் பொறுப்பேற்பு: கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர்

கோயம்புத்தூரைச் சேர்ந்த அன்புராஜன் ஐபிஎஸ் திருப்பதி எஸ்பி.யாக நேற்று பொறுப்பேற்றார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த அன்புராஜன் ஐபிஎஸ், நேற்றுகாலை திருப்பதியின் புதியஎஸ்பி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவர், திருப்பதி நகரின் முக்கியபிரச்சனைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம்கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பக்தர்களுக்கு பாதுகாப்பு

நான் ஐபிஎஸ் தேர்ச்சி முடிந்த பின்னர் முதன்முதலில் சித்தூர் மாவட்டத்தில்தான் எனது பயிற்சியை மேற்கொண்டேன். இதைத்தொடர்ந்து கடப்பா, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் பணியாற்றி, முதன்முறையாக எஸ்பி.யாக திருப்பதியில் பதவி ஏற்றிருக்கிறேன். இங்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து, அதன்படி அனைத்து பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக பெண்கள், பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நட்புடன் பழக வேண்டும்

சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் நான் கண்டிப்பானவன். பொதுமக்கள் என்னை24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். எதற்கும் தயங்கவேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால்,தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போலீஸ்துறை பொதுமக்களோடு நட்புடன் பழக வேண்டும். இதற்கான அனைத்து நட வடிக்கைகளையும் மேற்கொள்வேன்.

இவ்வாறு புதிய எஸ்பியாக பதவியேற்ற அன்புராஜன் கூறினார். முன்னதாக, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்காலை மரியாதை நிமித்தமாக அன்புராஜன் சந்தித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x