Last Updated : 13 Nov, 2018 12:06 PM

 

Published : 13 Nov 2018 12:06 PM
Last Updated : 13 Nov 2018 12:06 PM

ரியாத்துக்குக் கடத்தப்பட்ட ஹைதராபாத் பெண்: சுஷ்மா ஸ்வராஜ் உதவியை நாடும் உறவினர்கள்

சவூதி அரேபியாவுக்கு கடத்தப்பட்ட தன் மகளை இந்தியாவுக்குக் கொண்டுவர வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிசெய்ய வேண்டும் என ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹபீப் உன்னிஸா, இதுகுறித்து ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில், சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு என் மகள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இரு ஏஜென்ட்கள் கடத்திச் சென்றுவிட்டனர்.

என் மகள் பெயர் ஹலீம் உன்னிஸா, மார்ச் 20/17ல் ரியாத் சென்றார். இப்போதுவரை அவர் நாடு திரும்பவில்லை. அங்குள்ள ஒரு அழகுநிலையத்தில் அவருக்கு வேலை இருப்பதாகக் கூறி இரு ஏஜென்டுகள் அவரை அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு என் மகளுக்கு மிகுந்த தொல்லைகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து நாங்கள் ஏற்கெனவே காவல்துறைக்கு புகார் அளித்துள்ளோம். இப்பிரச்சினையில் அரசாங்கம் தலையிடடு எங்களுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு ஹபீப் உன்னிஸா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் உறவினர் முகம்மது ஆஸிப் கான் கூறுகையில், ‘‘ரியாத்தில் என் சகோதரிக்கு ரூ.25 ஆயிரம் மாத சம்பளம் பெற வாய்ப்புஉள்ளது. என்று கூறினர். ஆனால் அங்கு அவர் வீட்டுவேலை செய்பவராக உள்ளார். எனவே அவரை திருப்பி தாய்நாட்டுக்கே அனுப்பிவைக்கும்படி நாங்கள் கேட்டோம். ஆனால் அவர்களிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை. இதனால் நாங்கள் இந்திய தூதரகத்தை நாடியுள்ளோம்’’ என முகமது ஆஸிப் கான் தெரிவித்தார்.

நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறி ஏஜென்ட்கள் மூலம் சவூதி போன்ற நாடுகளுக்கு செல்பவர்கள் அங்கு வீட்டுவேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி சொல்லொனா கொடுமைகளை அனுபவிக்க நேரும் அவலங்கள் தொடர்ந்தாலும் மேலும் மேலும் தங்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக இந்திய மக்கள் வெளிநாடு செல்வதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x