Published : 17 Nov 2018 08:22 AM
Last Updated : 17 Nov 2018 08:22 AM

ஆந்திர மாநிலத்தில் சிபிஐக்கு தடை: சந்திரபாபு நாயுடு அறிவிப்புக்கு மம்தா பானர்ஜி வரவேற்பு 

ஆந்திர மாநிலத்தில் மத்திய புலனாய்வு துறையான சிபிஐ-க்கு அம்மாநில அரசு தடை விதித்துள் ளது. இதன் காரணமாக இனி ஆந்திராவில் சிபிஐ துறையினர் யாரையும் விசாரிக்க முடியாது. முதல்வர் சந்திரபாபு நாயுடு எடுத்துள்ள இந்த அதிரடி முடிவை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார்.

மத்திய புலனாய்வு துறை (சிபிஐ), இனி ஆந்திர மாநிலத்தில் அதிரடி சோதனைகளோ, புலனாய் வுகளோ செய்ய இயலாது. சிபிஐ மத்திய அரசின் கையில் ஒரு பொம்மை போல் செயல் படுவதாகவும்,இதற்கு ஆதாரமாக சமீபகாலமாக சிபிஐ துறையில் பல குளறுபடிகள் நடந்து, உயர்மட்ட அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தை நாடியதே இதற்கு ஆதாரம் எனவும், இதனால், சிபிஐ இனி ஆந்திராவில் எந்தவித சோதனைகள் செய்ய வேண்டியதில்லை என ஆந்திர அரசு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது.

டெல்லியை தவிர, நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசு, (General consent) பொது ஒப்புதல் அளிப்பது அவசியம். இந்த பொது ஒப்புதலை நேற்று முன் தினம் ஆந்திர அரசு வாபஸ் பெற்று கொள்வதாக அறிவித்து, அதற்கான அறிக்கையையும் கெஜெட்டில் வெளியிட்டது. இதன் மூலம், இனி ஆந்திர மாநிலத்தில் சிபிஐ அதிகாரிகள் யாரும் சோதனைகள் செய்ய முடியாது. ஆந்திர மாநிலத்தில் பணியாற்றும் மத்திய அரசுக்கு சம்பந்தப்பட்ட தபால் துறை, துறைமுகம், வருமான வரித்துறை, பிஎஸ்என்எல், எல்.ஐ.சி, ரயில்வே, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களோ அல்லது அதிகாரிகளோ முறைகேடுகளில் சிக்கினால், சிபிஐ-க்கு பதில், மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு துறையே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தும். வழக்கமாக சிபிஐ உடன் இணைந்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இதுவரை செயல்பட்டு வந்தனர். இனி, சிபிஐ இல்லாமலேயே ஆந்திர மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை மட்டும் செயல்படும். இந்த அதிரடி அறிவிப்பு மூலம் சிபிஐ சோதனைகள் இனி ஆந்திராவில் நடைபெறாது.

சமீபகாலமாக ஆந்திர மாநிலம் முழுவதும் ஆளும் கட்சியான தெலுங்கு தேச கட்சியின் எம்பிக்கள், ஆதரவாளர்களின் நிறுவனங்கள், வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்றது. ஆனால், இதில் யாரும் சிக்கவில்லை. இது குறித்து பலர் சந்திரபாபு நாயுடுவிடம் முறையிட்டனர். இது அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே நடந்ததாக பலர் கருத்து தெரிவித்தனர். இதனிடையே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் மீது விசாகப்பட் டினத்தில் தாக்குதல் நடந்தது.

இந்த சம்பவம் குறித்து ஜெகன்மோகன் ரெட்டி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ஆந்திர போலீ ஸார் மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், மத்திய அரசின் ஏதாவது ஒரு புலனாய்வு அமைப்பு இது குறித்து விசாரணை நடத்தி னால், தான் வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனால், இதை வைத்து சிபிஐ விசாரணை நடத்தி, தங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்று ஆளும் தெலுங்கு தேசம் கட்சி கருதி, அதனால் தற்போது சிபிஐ துறையையே ஆந்திராவில் தடை செய்துள்ளதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால், ஆந்திர அரசின் நடவடிக்கையை மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் நேற்று கூறுகையில், ‘‘சிபிஐ, ஆர்பிஐ (ரிசர்வ் வங்கி) ஆகியவற்றை மத்திய பாஜக அரசு தனது கைகளில் வைத்துக் கொண்டு ஒரு பொம்மை போல் செயல்பட வைக்கிறது. இது அதிகார துஷ்பிரயோகமாகும். தற்போது ஆந்திராவில் சிபிஐ துறையை தடை செய்ததுள்ளதை வரவேற்கிறேன். இதன் மூலம் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக இனி யாரையும் சிபிஐயை வைத்து மிரட்ட முடியாது. மேற்கு வங்கத் திலும் இது குறித்து பரிசீலிக்கப் படும்’’ என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதன் காரண மாக விரைவில் மேற்குவங்க மாநிலத்திலும் சிபிஐ-க்கு தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x