Published : 14 Aug 2014 08:35 AM
Last Updated : 14 Aug 2014 08:35 AM
உச்ச நீதிமன்றத்தின் முதல் தமிழ் பெண் நீதிபதி பானுமதி உட்பட நான்கு புதிய நீதிபதிகள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக அபய் மனோகர் சாப்ரே, ஆர்.பானுமதி, பிரபுல்ல சந்திர பந்த், உதய் உமேஷ் லலித் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும், தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா முன்னிலையில் புதன் கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
அபய் மனோகர் சாப்ரே, கவுகாத்தி உயர் நீதிமன்றத்திலும், பிரபுல்ல சந்திர பந்த், மேகாலயா உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள். உதய் உமேஷ் லலித், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக இருந்தவர். 2ஜி அலைக் கற்றை உள்ளிட்ட வழக்குகளில் சிபிஐ தரப்பில் ஆஜராகி வந்தார். இவர் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தேர்வு செய் யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு சந்தோஷ் ஹெக்டே, ரோஹின்டன் நரிமன் ஆகியோர் இதுபோன்று நேரடி யாக நீதிபதியாக தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
தமிழகத்தின் தருமபுரி மாவட்டத் தைச் சேர்ந்த ஆர்.பானுமதி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப் பேற்கும் முதல் தமிழ் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் அடுத்த ஏழு ஆண்டு களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியில் இருப்பார்.
மாவட்ட நீதிபதியாக நேரடியாக நியமிக் கப்பட்ட பானுமதி, கடந்த 2003-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் பெற்றார். பெரும் பரபரப்பை ஏற்படுத் திய பிரேமானந்தா வழக்கில், இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT