Published : 24 Oct 2018 09:30 AM
Last Updated : 24 Oct 2018 09:30 AM
திருப்பதி ஏழுமலையான் கோயி லில் மாற்றுத்திறனாளிகள், 65 வயது நிரம்பிய முதியோர், 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தை யுடன் தரிசனத்திற்கு வரும் பெற்றோர் ஆகியோருக்கு சிறப்பு தரிசன முறையை தேவஸ்தானம் அமல்படுத்தி வருகிறது.
அதன்படி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு இதுவரை வெள்ளிக்கிழமை காலை தவிர, மற்ற அனைத்து நாட் களிலும் காலை 10 மணிக்கு 700 பேர், மதியம் 3 மணிக்கு மேலும் 700 பேர் என தினமும் 1400 பக்தர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகிறது. இவர் களுக்கு திருமலையில் உள்ள மியூசியத்திற்கு எதிரே 7 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பக்தர்களின் கூட்டம் குறைவாக இருக்கும்போது, மாதத்திற்கு 2 முறை முதியோர், மாற்றுத்திறனாளி பக்தர்கள் 4000 பேருக்கு தேவஸ்தானம் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இனி, வெள்ளிக்கிழமை மட்டுமின்றி, புதன்கிழமைகளிலும் காலை 10 மணிக்கு செல்லும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக மதியம் 700 பேருக்கு பதில் 1000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக திருமலை இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு நேற்று அறிவித்தார். வயது வரம்பை சரிபார்க்க அனைவரும் ஆதார் அட்டையுடன் வர வேண்டுமெனவும் குறிப்பிட பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT