Published : 20 Oct 2018 06:22 PM
Last Updated : 20 Oct 2018 06:22 PM
உதவி ஆய்வாளரை மோசமான வார்த்தைகளால் திட்டி, அடித்து உதைத்த பாஜக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
மீரட்டைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் முனிஷ் குமார். இவர் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார். அங்கு உதவி ஆய்வாளர் ஒருவர் பெண் வழக்கறிஞருடன் சாப்பிட வந்தார். இருவரும் உணவை ஆர்டர் செய்துவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். உணவு வரத் தாமதமானதால், உதவி ஆய்வாளர் அங்கிருந்த வெயிட்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வெயிட்டர் இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் முனிஷ் குமாரிடம் கூறினார். அங்கு வந்த முனிஷ், உதவி ஆய்வாளரை சரமாரியாகத் தாக்கினார். மோசமான வார்த்தைகளால் சாடினார்.
வைரலான வீடியோ
#WATCH: BJP Councillor Manish thrashes a Sub-Inspector who came to his (Manish's) hotel with a lady lawyer and got into an argument with a waiter. The councillor has been arrested. (19.10.18) (Note- Strong Language) pic.twitter.com/aouSxyztSa
— ANI UP (@ANINewsUP) October 20, 2018
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து உத்தரப் பிரதேச காவல்துறையினர் முனிஷ் குமாரைக் கைது செய்தனர். இதுகுறித்து எஸ்பி ஆர்.சிங் கூறும்போது, ''முனிஷ் குமார் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
முனிஷைக் கைது செய்ததை அறிந்த அவரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வீடியோவைக் காட்டினோம். சமாதானம் அடைந்த அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT