Published : 04 Oct 2018 09:46 AM
Last Updated : 04 Oct 2018 09:46 AM
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் நேற்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஆந்திர மேலவை உறுப்பினர் எம்விவிஎஸ்.மூர்த்தி உட்பட 4 பேர் பலியாயினர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட் டினத்தைச் சேர்ந்தவர் எம்விவிஎஸ் மூர்த்தி. இவர் ‘கோல்ட் ஸ்பாட்’ மூர்த்தி என்றும் அழைக்கப்படு கிறார். தொழிலதிபரான இவர், கீதம் பல்கலைக்கழகத்தின் நிறுவன ராவார். தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி.யான இவர் தற்போது அக்கட்சி சார்பில் சட்டமேலவை உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் மூர்த்தி தனது கீதம் பல்கலைக்கழகம் சார்பில் கலிபோர்னியாவில் வரும் 6-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்கா சென்றார். அவருடன் வெலிவோலு பசவ புண்ணய்யா, விபிஆர் சவுத்ரி, கடையாலா வெங்கட்ரத்தினம் ஆகி யோரும் சென்றனர்.
இந்நிலையில் அலாஸ்கா பகுதியில் நேற்று காலை இவர்கள் சென்ற கார் மீது வேன் மோதிய விபத்தில் மூர்த்தி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து மூர்த்தியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித் துள்ளனர்.
ஆந்திர கல்வி அமைச்சர் கண்டா ஸ்ரீநிவாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நால்வரின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். பிரேதப் பரிசோதனைகள் முடிந்து அனைவரின் உடல்களும் வரும் ஞாயிற்றுக்கிழமை தாயகம் வரும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT