Last Updated : 01 Oct, 2018 11:08 AM

 

Published : 01 Oct 2018 11:08 AM
Last Updated : 01 Oct 2018 11:08 AM

தொப்பி அணிய மறுத்த அமைச்சர்: மரியாதையை ஏற்க மறுத்ததால் பிஹார் முஸ்லிம் மாநாட்டில் சர்ச்சை

பிஹாரின் காதிஹாரில் நேற்று நடைபெற்ற விழாவில் தொப்பி அணிவிக்கும் மரியாதையை ஏற்றுக்கொள்ள அமைச்சர் பிஜேந்திர யாதவ் மறுத்ததால் கூட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் ஒருங்கிணைந்த ஜனதா தளம் ஏற்பாடு செய்திருந்த 'தாலிமி பெடரி' முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டின்போது நடைபெற்றது. இதில் யாதவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அமைப்பாளர்களில் ஒருவர் தனது தலையில் ஒரு தொப்பியை வைக்க முயன்றார். அதைத் தடுத்த அமைச்சர் தொப்பியை வைத்துக்கொள்ள மறுத்துவிட்டார். அவசரமாக அவரிடமிருந்து வாங்கி தனது உதவியாளரிடம் தந்துவிட்டார்.

மேடையில் தனது தலையில் தொப்பி அணிய மறுப்பு தெரிவித்தமைக்காக தங்கள் மரியாதையை ஏற்றுக்கொள்ள மறுத்து அவமதித்துவிட்டதாக மாநாட்டு மேடையின்முன்பு சில முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிஹார் மாநிலத்தில் எரிசக்தித் துறை அமைச்சராக உள்ள யாதவ், முதல்வர் நிதிஷ்குமார் அமைச்சரவையில் துணை முதல்வர் சுஷில் மோடிக்கு அடுத்து மூன்றாவது நிலையிலுள்ள மூத்த அமைச்சராகக் கருதப்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x