Published : 03 Oct 2018 08:35 AM
Last Updated : 03 Oct 2018 08:35 AM

ஆந்திர எம்எல்ஏவை மாவோயிஸ்ட்கள் கொன்ற வழக்கில் 3 அரசியல் கட்சிகளை சேர்ந்த 6 பேர் கைது: தங்குவதற்கு இடம் கொடுத்து உதவியது அம்பலம்

விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஆகிய இரு வரை மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்றனர். இதில், மாவோயிஸ்ட் களுக்கு 3 கட்சிகளைச் சேர்ந்தவர் கள் தங்க இடம் கொடுத்ததோடு மேலும் பல உதவிகளை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினம் அரக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிட்டாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமா ஆகிய இருவரையும் கடந்த மாதம் 23-ம் தேதி மாவோயிஸ்ட் கள் சுட்டுக்கொன்றனர்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் களை பிடிக்கும் பணியில் ஆந்திர மாநில டிஜிபி தாகூர் தலைமையில் தனி போலீஸ் குழு அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பல அதிர்ச்சி தகவல்களை போலீஸார் சேகரித்துள்ளனர். இது குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கையை நேற்று டிஜிபி தாகூர், விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து நேரில் வழங்கினார். அந்த அறிக்கையின்படி, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ கிட்டாரி சர்வேஸ்ரவ ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகியோரை கொன்ற வழக்கில், மாவாயிஸ்ட்கள் 3 முறை அரக்கு, பாடேரு பகுதிகளில் சுற்றுத்திரிந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளை 6 பேரை போலீஸார் பிடித்து விசாரித்துள்ளனர்.

இதில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 3 பேரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒருவரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் உள்ளூரை சேர்ந்த அரசியல்வாதி கள். இவர்களின் உதவியால், மாவோயிஸ்ட்கள் தங்கும் இடம், உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை பெற்றுள்ளனர்.

எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்எல்ஏ.வின் அன்றாட செயல் பாடுகளை அறிந்தனர். அதன் பின்னர், இருவரும் சேர்ந்து ஒரே காரில் சென்றபோது, கொலை செய்ய திட்டமிட்டு அதனை வெற்றிகரமாக அரங்கேற்றி யுள்ளனர்.

இதனால், மாவோயிஸ்ட் களுக்கு உதவிய அந்த 6 பேரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இவர்களை மாவோயிஸ்ட்கள் மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்தனரா ? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 3 பேரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x