Last Updated : 24 Aug, 2014 10:39 AM

 

Published : 24 Aug 2014 10:39 AM
Last Updated : 24 Aug 2014 10:39 AM

சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீடு செய்யத் தகுதியற்றது: ஏ.ஜி.

சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீடு செய்யத் தகுதி யற்றது என்று அட்டர்னி ஜெனரல் (ஏ.ஜி.) முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத் துக்கு அவர் சமர்ப்பித்துள்ள கருத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

"2004ம் ஆண்டு நடந்த சங்கரராமன் கொலை வழக்கில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஆகியோரை புதுச்சேரி நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. அவர்களின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி புதுச்சேரி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. அப்போது மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் அவகாசமிருந்தது. தொடக்கத்தில் மேல்முறையீடு செய்ய புதுச்சேரி அரசு ஆர்வமற்று இருந்தது. அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முன்னாள் துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அனுமதியளித்தார்.

இதுகுறித்து வீரேந்திர கட்டா ரியா கூறும்போது தனக்கு இந்த வழக்கு பற்றி முழு விவரங்களும் சொல்லப்படவில்லை என்றார். இந்தப் பின்புலத்தில்தான் புதுச்சேரி அரசு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலமாக இந்த விஷயத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கோரியது.

காஞ்சி சங்கராச்சாரியார் களை விடுவிப்பதற்கு விசாரணை நடத்தப்பட்ட விதம், சாட்சியங் கள் உருவாக்கப்பட்ட விதம் உள் ளிட்ட‌ 20 காரணங்களைப் பட்டிய லிட்டுள்ளது புதுச்சேரி நீதிமன்றம். மேலும் 189 சாட்சியங்களில் இறந் தவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 83 பேர் பிறழ் சாட்சியங்கள் ஆயினர். எனவே இந்த வழக்கு மேல்முறையீடு செய்யத் தகுதியற்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x