Last Updated : 24 Oct, 2018 11:39 AM

 

Published : 24 Oct 2018 11:39 AM
Last Updated : 24 Oct 2018 11:39 AM

ஏழை, பணக்காரர் இடையிலான வித்தியாசத்தைக் குறைத்தவர்- மோடிக்கு 2018-க்கான சியோல் அமைதி விருது

ஏழை- பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்ததற்காகவும் உலக அமைதிக்காகப் பங்காற்றியதற்காகவும் இந்தியப் பிரதமர் மோடிக்கு 2018-ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது வழங்கப்படுவதாக கொரியா தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இந்த விருதைப் பெறும் 14-வது நபராக மோடி திகழ்கிறார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம், ’’உலக அமைதியை மேம்படச் செய்வதற்காக மோடி மேற்கொண்ட அர்ப்பணிப்பான செயல், உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்காக உழைத்தது, இந்திய மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது, ஏழை பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்தது, ஊழல் எதிர்ப்பு மற்றும் சமூக ஒருமைப்பாட்டு முயற்சிகள் மூலம் ஜனநாயகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றது ஆகிய காரணங்களுக்காக இந்தியப் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்படுகிறது.

உயிர்ப்பான உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் மூலம் உலக அமைதிக்காக பாடுபட்ட மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளது.

1990-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் சியோல் அமைதி விருது, அதே ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நினைவாகத் தொடங்கப்பட்டது.

முந்தைய ஆண்டுகளில் ஐ.நா. முன்னாள் செயலர் கோபி அன்னன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x