Published : 23 Aug 2014 10:25 AM
Last Updated : 23 Aug 2014 10:25 AM

ராணுவம், மருத்துவ துறைகளில் புதிய கண்டுபிடிப்பு: ஐஐடி-களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

ராணுவம், மருத்துவத் துறைகளில் பயன் படுத்தும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐஐடி) உருவாக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் ஐஐடி-க்களின் நிர்வாகக் குழு தலை வர்கள், இயக்குநர்கள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மோடி பேசியது: அறிவியல் என்பது உலகளாவி யதாக இருக்கலாம். ஆனால் தொழில்நுட்பம் என்பது நம்முடைய தாக இருக்க வேண்டும். ஐஐடி-கள் நாட்டுக்கு உபயோகமான பல கண்டுபிடிப்புகளை தந்துள்ளன.

இப்போது ராணுவ ஆயுதத் தொழில்நுட்பத் துறையிலும், நவீன மருத்துவ உபகரணத் துறையிலும் நாம் பிற நாடு களையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எனவே ஐஐடி-கள் அத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.

அனைவருக்கும் வீடு, ரயில்வே துறை நவீனமயமாக்குதல் என பல்வேறு திட்டங்கள் அரசிடம் உள்ளன. இவற்றை குறைந்த செலவில் அதே நேரத்தில் தரமான தாகவும் செய்து முடிக்க நவீன தொழில்நுட்பம் மிகவும் அவசியம். இதற்கு புதிய கண்டுபிடிப்புகள் வேண்டும். ஐஐடி-யில் படிப்பு முடித்து வெளியே வரும் இளம் புத்திசாலிகள் நாட்டுக்கு சேவையாற்றும் நோக்குடன் வர வேண்டும். நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் மிகப்பெரிய சக்திகளாகத்தான் நான் ஐஐடி-களை பார்க்கிறேன்.

ஐஐடி-கள் தங்கள் அருகில் உள்ள பொறியியல் கல்லூரி களை கவனத்தில் கொண்டு அவற்றுக்கும் வழிகாட்ட வேண் டும் என்று மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x