Last Updated : 08 Oct, 2018 03:16 PM

 

Published : 08 Oct 2018 03:16 PM
Last Updated : 08 Oct 2018 03:16 PM

ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட துணை சபாநாயகரை கீழே தள்ளிவிட்ட யானை: மக்கள் அலறியடித்து ஓட்டம்

அசாம் மாநிலம், கரிம்கஞ்ச் மாவட்டத்தில் யானை மீது ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சட்டப்பேரவை துணை சபாநாயகரையும், பாகனையும் யானை கீழே தள்ளிவிட்டது. இதனால், மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக சர்பானந்த சோனாவால் இருக்கிறார். அங்குள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ரதாபாரி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாஜகவின் கிரிபாநாத் மல்லா. இவர் தற்போது சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக இருக்கிறார்.

இந்நிலையில், சட்டப்பேரவை துணை சபாநாகராக நியமிக்கப்பட்ட பின் தனது தொகுதிக்கு சனிக்கிழமை கிரிபாநாதா மல்லா சென்றார். அவருக்கு அந்தத் தொகுதி மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். கிரிபாநாத்தை வரவேற்கும் வகையில் யானையை வாடகைக்கு அமர்த்தி, அதில் துணை சபாநாயகர் கிரிபாநாத்தை அமரவைத்து மக்களும், பாஜக தொண்டர்களும் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதற்காக ஸ்பந்தன் என்ற தொண்டுநிறுவனம் ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

இந்நிலையில், ரதாபாரி பகுதியில் அனிபூர் பஜார் பகுதியில் யானையில் ஊர்வலமாக அமர்த்தி கிரிபாநாத் அழைத்துவரப்பட்டார். அப்போது, யானைக்குப் பின்புறத்தில் இருந்து விஷமிகள் சிலர் பட்டாசுகளை கொளுத்திப் போட்டனர். இதில் அச்சமடைந்த யானை பிளிறிக்கொண்டு, சாலையில் ஓடத் தொடங்கியது. யானை ஓடுவதைப் பார்த்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்.

அப்போது, யானை மீது அமர்ந்திருந்த பாகனும், துணை சபாநாயகர் கிரிபாநாத்துக்கும் நிலைகொள்ள முடியாமல் யானை மீதிருந்து சாலையில் கீழே விழுந்தனர்.

துணை சபாநாயகர் கிரிபாநாத் கீழே விழுந்ததும் அவரைத் தூக்க தொண்டர்கள் உடனடியாக வரவில்லை, சிறிதுநேரத்துக்கு பின் வந்து கிரிபாநாத்தை காப்பாற்றினார். அப்போது தனக்கு ஒன்றும் ஆகவில்லை, நலமாக இருக்கிறேன் என்று சமாதானம் சொல்லி கிரிபாநாத் அங்கிருந்து சென்றார்.

யானை பிளிறிக்கொண்டு ஓடியபோடு, சபாநாயகர் கிரிபாநாத் விழுந்த இடம் சாலையில் புற்கள் நிறைந்த இடமாக இருந்ததால், லேசான அடியுடன் அவர் தப்பித்தார். ஏதாவது கற்கள் மீது விழுந்திருந்தால், கிரிபாநாத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கும். யானை மீது இருந்து சபாநாயகர் கீழே விழுந்ததைப் பார்த்த மக்கள் ஒருபுறம் சிரித்தாலும், மறுபுறம் யானை ஓடியதைப் பார்த்து அச்சத்துடன் நின்றிருந்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x