Published : 27 Aug 2014 09:18 AM
Last Updated : 27 Aug 2014 09:18 AM

மோடி அலை காணாமல் போய்விட்டது: காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் பேட்டி

இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பரவலாக‌ வெற்றி பெற்றிருப் பதால், மக்களவைத் தேர்தலின் போது கூறப்பட்ட ‘மோடி அலை' காணாமல் போய்விட்டது என காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித் துள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பெங்களூரில் குயின்ஸ் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலு வலகத்தில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், கர்நாடக‌ மாநில மேலிட பொறுப்பாளருமான திக்விஜய்சிங் தலைமை வகித்தார்.

இதில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர், உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் உட்பட பல முக்கிய நிர் வாகிகள் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில், ‘தேர்தலின் போது மக்களுக்கு அளிக்கப் பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்று வது, துணை முதல்வர் பதவியை உருவாக்குவது, அமைச்சரவையில் காலியாக உள்ள 4 இடங்களை நிரப்புவது’ உள்ளிட்ட விவகாரங்கள் தொடர் பாக விவாதிக்கப்பட்டதாக கூறப் படுகிறது.

மோடியை காணவில்லை

இதனைத் தொடர்ந்து திக் விஜய்சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது:

கர்நாடகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெல்லாரி ஊரகம், சிக்கோடி,ஷிகாரிப்புரா ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதி களில் காங்கிரஸ் 2 இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருக் கிறது. இந்த 3 தொகுதிகளிலும் கடந்த மக்களவை தேர்தலை விட, தற்போது காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம் மக்கள் காங்கிரஸூக்கு மகுடம் சூட்டியிருக்கிறார்கள்.

கடந்த மக்களவை தேர்தலின் போது நாடு முழுவதும் நரேந்திர மோடியின் அலை வீசுவதாக பாஜக பொய் சொல்லி வந்தது. தற்போது இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் மோடி அலை காணாமல் போய் விட்டது.மோடி அலையின் மாயை தற்போது கலைந்து விட்டது.

இடைத்தேர்தலில் நாடு முழுவதும் மதவாத கட்சியான‌ பாஜக பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. இது மதசார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. இனியும் தனிநபரை முன் வைத்து தேர்தலை சந்திக்காமல், கருத்தியலை முன்வைத்து தேர்தலை சந்திக்க பாஜக கற்றுக் கொள்ள வேண்டும்.

மோடியிடம் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த வளர்ச்சி, குஜராத் மாதிரி ஆகியவை தற்போது என்ன ஆனது என்றே தெரியவில்லை. தேர்தலுக்கு முன்னர் மிகவும் பிரம்மாண்டமாக தெரிந்த மோடி தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x