Last Updated : 01 Oct, 2018 10:55 AM

 

Published : 01 Oct 2018 10:55 AM
Last Updated : 01 Oct 2018 10:55 AM

அம்பேத்கர் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்ய விரும்பினார்: சுமித்ரா மகாஜன்

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு கால வரையறை எதுவும் இல்லாததால் ஏற்படும் விளைவுகளை கேள்விக்குட்படுத்தி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் 'லோக் மந்தன்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசியதாவது:

நம் நாட்டில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதில் கால வரையறை எதுவும் இல்லாத நிலையில் தொடர்வதை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்ய விரும்பினார். 10 ஆண்டுகளுக்கு மட்டுமே ஒதுக்கீடு தேவை என்று அம்பேத்கர் கூறுகிறார். அவர் 10 ஆண்டுகளுக்குள் சமமான வளர்ச்சியையும் அவர் செயல்படுத்த முயன்றார். ஆனால் அது நடக்கவில்லை. அப்போது நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள்தான் மேலும் 10 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீட்டை நீட்டிக்கச் செய்தனர்.

மக்கள் வாழ்வதற்கும் நாட்டிலுள்ள சமூக-பொருளாதார அமைப்புகளை மாற்றுவதற்கும் இட ஒதுக்கீட்டினால் மட்டுமே முடியாது.

நாட்டினுடைய முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக தேசபக்தி உணர்வை மக்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டும். நாட்டில் சமூக ஒற்றுமை நீடிக்க நாம் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.

அனைத்துத் துறைகளிலும் பெண்கள் மதிக்கப்பட வேண்டும். ஏனெனில் அனைவருமே இந்நாட்டு குடிமக்கள்தான். தேசியத்தைக் கட்டியெழுப்பும் சீரிய பணிகளில் இளைஞர்களும் முன்னோக்கி வர வேண்டும்.''

இவ்வாறு ராஞ்சி விழாவில் சுமித்ரா மகாஜன் பேசினார். இப்பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x