Last Updated : 22 Oct, 2018 12:46 PM

 

Published : 22 Oct 2018 12:46 PM
Last Updated : 22 Oct 2018 12:46 PM

வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன்: பாதித் தலையை மொட்டையடித்த மர்ம நபர்

 

லக்னோவில் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகனின் பாதித் தலை மொட்டை அடிக்கப்பட்டுள்ளது.

லக்னோவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, பைக்கும், தங்க செயினும் வேண்டும் என்று மணமகள் வீட்டாரிடம் மணமகன் கேட்டார். ஆனால் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால் அவற்றை வாங்கித் தர இயலாது என்று அவர்கள் கூறினர். அதனால் ஆத்திரமடைந்த மணமகன் பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்தார். இதனையடுத்து அவர் திருமணத்தையும் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே உறங்கும்போது மணமகனின் பாதித் தலை மழிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மணப்பெண்ணின் பாட்டி கூறும்போது, ''திருமணம் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன், மணமகன் வரதட்சணை கேட்டார். குறுகிய காலமே இருந்ததால், எங்களால் செய்ய இயலாது என்று கூறினோம். அதனால் திருமணத்தை மணமகன் வீட்டார் நிறுத்தினர். அவரின் தலைக்கு யார் மொட்டை அடித்தது என்று தெரியவில்லை'' என்றார்.

மணமகனின் பாதித்தலை மொட்டை அடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x