Published : 05 Oct 2018 08:40 AM
Last Updated : 05 Oct 2018 08:40 AM
புதிய ஆந்திர மாநிலத்துக்கு 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் குண்டூர் மாவட்டம், சத்தன பல்லி சட்டப்பேரவை தொகுதி யில், தெலுங்கு தேசம் கட்சி வேட் பாளாராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கோடல சிவப்பிரசாத் (71). தற்போது சட்டப்பேரவை சபாநாயகராக இருக்கிறார்.
இந்நிலையில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சிக்கு சிவப்பிரசாத் அளித்த பேட்டியில், ‘‘தேர்தலில் ரூ. 11.5 கோடி செலவு செய்தேன்” என பகிரங்கமாக கூறினார். இதனை ஆதாரமாக கொண்டு சிங்காரெட்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் ரெட்டி என்பவர் கரீம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ஏற்ற கரீம் நகர் நீதிமன்றம், கோடல சிவப் பிரசாத்துக்கு நோட்டீஸ் வழங் கியது. அதை எதிர்த்து ஹைதரா பாத் உயர் நீதிமன்றத்தில் சிவப்பிரசாத் தடை பெற்றார். தற் போது, ஹைதராபாத் நாம்பல்லி யில், எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீது தொடரப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் 6 மாத இடைக்கால தடை நிறைவடைந்துள்ளது. எனவே, வரும் 10-ம் தேதி இவ்வழக்கு தொடர்பாக கோடல சிவப்பிரசாத் நேரில் ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் நேற்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT