Published : 02 Aug 2014 09:27 AM
Last Updated : 02 Aug 2014 09:27 AM

ஏழுமலையானிடம் 6,800 கிலோ தங்கம்: தங்கத்தையே வட்டியாக தரும் வங்கிகள்

உலகின் பணக்கார கடவுளாகக் கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் வங்கி கணக்கில் இப்போது 5,000 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தேவஸ்தானம் சார்பில் மேலும் 1,800 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட உள்ளது. இந்த 6,800 கிலோ தங்கத்துக்கு தங்கத்தையே வட்டியாக வழங்க தேசிய வங்கிகள் ஒப்பு கொண் டுள்ளதால் தங்கம் குவிந்து வருகிறது.

அரசர்கள் காலம் முதல் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தி வரு கின்றனர். அலங்கார பிரியரான ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்தும் தங்க நகைகள் பல்வேறு விசேஷ நாட்க ளில் அணிவிக்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்க நகைகளை காலம் காலமாக தேவஸ்தான லாக்கர் களில் பத்திரப்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இந்த நகைகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவற்றில் டெபாசிட் செய்து வருகின்றனர். இதன் மூலம், தற்போது 5,000 கிலோ தங்க நகைகள் ஏழுமலையான் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

டெபாசிட் செய்யப்படும் தங்கத் துக்கு வட்டியாக ரொக்கத்துக்கு பதில் தங்கமாகவே ஏழுமலை யான் கணக்கில் சேர்க்கும் வகையில் வங்கிகளுடன் திரு மலை-திருப்பதி தேவஸ்தானத் தினர் ஒப்பந்தம் செய்து கொண் டுள்ளனர். இதன்படி இதுவரை டெபாசிட் செய்யப்பட்டுள்ள 5,000 கிலோ தங்கத்துக்கு வட்டியாக 50 கிலோ தங்கம் கூடுதலாக சேர்ந்துள்ளது.

இந்நிலையில் மேலும் 1,800 கிலோ தங்க நகைகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் டெபாசிட் செய்ய உள்ளதாக தேவஸ்தான நிர்வாகிகள் சனிக் கிழமை தெரிவித்தனர். இதன்மூலம் ஏழுமலையான் கணக்கில் மொத்தம் 6,800 கிலோ தங்கம் டெபாசிட் ஆகி உள்ளது.

சிறப்பு தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் வசதி

தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால் கூறியதாவது: கோயிலில் நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தேவஸ் தானம் சார்பில் ஏற்கெனவே 3 வரிசை முறையை வெற்றிகரமாக அமல்படுத்தி உள்ளோம். ரூ. 300 கட்டணம் செலுத்தி ஏழுமலை யானை தரிசிக்கும் ஆன்லைன் வசதி இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் திருமலைக்கு வந்தால் வெறும் 2 மணி நேரத்தில் சுவாமியை தரிசிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இம்மாதம் 8,9,10, 15,16,17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறைகள் வருவதால் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என்றும் எம்.ஜி. கோபால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x