Published : 19 Oct 2018 08:54 PM
Last Updated : 19 Oct 2018 08:54 PM
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசாரா பண்டிகையையொட்டி, ராவணன் உருவபொம்மை எரிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மீது ரயில் மோதியதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் தெரிவிக்கின்றது. அந்த விபத்து நடந்த விதம்குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
இன்று தசாரா பண்டிகை நாடுமுழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அமிர்தசரஸில் உள்ள சவுரா பஜார் பகுதியில் ராவணன் உருவபொம்மை நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. அப்போது, ராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு அருகே ரயில்வே தண்டாளம் செல்கிறது.
இதனால், ராவணன் பொம்மை எரிப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். அப்போது, ரயில் தண்டவாளத்தை மறித்தும் ஏராளமான மக்கள் நின்றிருந்தனர். ராவணன் பொம்மை எரிக்கப்பட்டபோது, பட்டாசு வெடிக்கப்பட்டது.
பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் சத்தமும், ரயிலையும் மக்கள் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. அப்போதுவேகமாக வந்த ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் மீது கண்ணிமைக்கும் வேகத்தில் மோதிவிட்டுச் சென்றது.
போலீஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், எத்தனைப் பேர் பலியானார்கள், காயமடைந்தனர் என்ற முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லை.
#WATCH The moment when the DMU train 74943 stuck people watching Dussehra celebrations in Choura Bazar near #Amritsar (Source:Mobile footage-Unverified) pic.twitter.com/cmX0Tq2pFE
— ANI (@ANI) October 19, 2018
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், ரயில்விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT