Published : 26 Oct 2018 09:03 AM
Last Updated : 26 Oct 2018 09:03 AM
விசாகப்பட்டினம் விமான நிலை யத்தில், ஹைதராபாத் செல்ல காத்திருந்த ஒய்.எஸ்.ஆர். காங் கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை செல்ஃபி எடுப்பதுபோல வந்த ஹோட்டல் ஊழியர் கத்தியால் குத்தினார். ஜெகன்மோகனின் கட்சியைச் சேர்ந்தவரான அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா எதிர் கட்சித்தலை வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, தற்போது விஜயநகரம் மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும், தனது பாதயாத்திரையை நிறுத்தி விட்டு, ஹைதராபாத்தில் வழக்கு விசா ரணைக்கு ஆஜராகி வருகிறார்.
நேற்றும், வழக்கம்போல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக, விஜயநகரத்திலிருந்து கார் மூலம் விசாகப்பட்டினம் வந்த ஜெகன், அங்கிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்தார். மதியம் 12.15 மணிக்கு அவர், விஐபிகளுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் விமானத் திற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டதால், ஜெகன் அனுமதி கொடுத்தார். அப்போது, அந்த நபர் செல்ஃபி எடுப்பதுபோல் நடித்து, யாரும் எதிர்பாராத வேளை யில், தான் வைத்திருந்த கத்தியால், ஜெகன்மோகன் ரெட்டியை குத்தினார். இதில் ஜெகனின் இடது கையில் கத்திக் குத்து விழுந்தது.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், ஓடிச்சென்று, கத்தி யால் குத்திய நபரை கைது செய்தனர். அவர், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அமலாபுரத்தைச் சேர்ந்த நிவாச ராவ் என்பதும், ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர் என்பதும் தெரியவந்தது. ஆனால், இவர் ஏன் ஜெகன் மோகன் ரெட்டியை கத்தியால் குத்தினார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டி விமானத்தில் ஹைதராபாத் சென்று, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடைபெற்றதை அறிந்த அவரது கட்சியினர், ஆந்திரா முழுவதும் தீவிரமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டனர். இது தெலுங்கு தேசம் கட்சியின் சதி என்று குற்றம்சாட்டி னர். தெலங்கானாவிலும் பதற்றம் நிலவியது.
தீக்குளிக்க முயற்சி
அனந்தபூர் மாவட்டம், கதிரி பகுதியில், ஒய்எஸ்ஆர் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தலைவர் ஆஞ்சநேயலு என்பவர், ஆர்ப்பாட்டத்தின்போது, திடீரென மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து, அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை சமா தானப்படுத்தினர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஜெகன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். ஆனால், அந்த கத்தியில் ஏதாவது விஷம் தடவி உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 38 மி.மீ நீளமுள்ள கத்தியால் குத்தியிருந்தாலும், 15 மி.மீ ஆழம் வரை ஜெகனின் இடது கையில் அந்த கத்தி பதிந்திருப்பது தெரியவந்துள்ளது.
அரசியல் விளம்பரம்
அமராவதியில் ஆந்திர மாநில டிஜிபி டாகூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பிடிபட்ட ஸ்ரீநிவாச ராவிடம் 10 பக்கங்கள் கொண்ட கடிதத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து விசா ரணைக்கு பின்னரே கூற முடியும். ஸ்ரீநிவாச ராவின் வீட்டில் ஜெகனின் புகைப்படங்கள் உள்ளன. அவரது ஃபேஸ் புக்கிலும் ஜெகன் மோகனின் ஏராளமான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசைச் சேர்ந்தவர். சமீபத்தில் ஜெகன்மோகனின் பிறந்தநாளுக்குக் கூட, ஸ்ரீநிவாச ராவ், அவரது ஊரில் விளம்பர பேனர்கள் வைத்து கொண்டாடி உள்ளார். இப்படி இருக்கையில், இவர் ஏன் ஜெகனை கொலை செய்ய முயலவேண்டும் ? என்பதே கேள்வி. இது அரசியல் விளம் பரத்திற்காக செய்யப்பட்டதாகவே நான் கருதுகிறேன். இதுகுறித்து தனி குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.
இதனிடையே, ஆந்திர முதல் வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ‘‘எதிர்க்கட்சித் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி மீது நடைபெற்ற தாக்குதலை வன்மையாக கண் டிக்கிறேன். கொலை முயற்சி செய்தவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது என்னுடைய ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க செய்த சூழ்ச்சி’’ என்று தெரிவித் துள்ளார்.
ஆளுநர் நரசிம்மன், சந்திர பாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான லோகேஷ், ஜனசேனா கட்சித்தலைவரும் நடிகருமான பவன் கல்யாண், நடிகை ரோஜா, பாஜக மாநில தலைவர் கன்னா லட்சுமிநாராயணா, மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரகுவீரா ரெட்டி உட்பட பலர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT