Last Updated : 01 Oct, 2018 02:21 PM

 

Published : 01 Oct 2018 02:21 PM
Last Updated : 01 Oct 2018 02:21 PM

காக்கிக்குள் கசிந்த ஈரம்: தேர்வு எழுதிய தாயின் கைக்குழந்தையைத் தாலாட்டி தூங்கவைத்த காவலர்

காவலர் பணிக்கான தேர்வை எழுதிக் கொண்டிருந்த இளம் தாயின் கைக்குழந்தையைத் தாலாட்டித் தூங்க வைத்த தலைமைக் காவலர் ஒருவரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இந்தச் சம்பவம் தெலங்கானாவின் மஹபூப் நகரில் நடந்துள்ளது.

அங்குள்ள பாய்ஸ் ஜூனியர் கல்லூரியில் பயிற்சிக் காவலர் பணிக்கான தேர்வு (SCTPC exam) நடந்து கொண்டிருந்தது. மூஸாபேட் காவல் நிலையத் தலைமைக் காவலரான முஜீப்-அர்-ரஹ்மான், தேர்வுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அங்கே தேர்வு எழுத இளம் தாய் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் வந்திருந்தார். அவர் குழந்தையைப் பார்த்துக்கொள்ள உறவினர் ஒருவரைத் துணைக்கு அமர்த்திவிட்டுத் தேர்வு எழுதச் சென்றுவிட்டார். குழந்தை திடீரென வீறிட்டு அழத் தொடங்கியது. அவரால் குழந்தையை சமாதானப்படுத்த முடியவில்லை.

அதைப் பார்த்த ரஹ்மான், குழந்தையைக் கையில் வாங்கித் தாலாட்டு பாடினார். சில நிமிடங்களில் குழந்தை கையிலேயே தூங்கிவிட்டது.

இந்தச் சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த மஹபூப் நகர எஸ்பியும் ஐபிஎஸ் அதிகாரியுமான ரேமா ராஜேஸ்வரி, ''இதுதான் காவலர்களின் மனிதம்'' என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x