Published : 05 Aug 2018 08:01 AM
Last Updated : 05 Aug 2018 08:01 AM

ஏழுமலையானை தரிசனம் செய்ய  67,567 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள்

திருப்பதி ஏழுமலையானை பல்வேறு சேவைகள் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய 67,567 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.

திருப்பதி ஏழுமலையானை  தரிசிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பல்வேறு சேவைகள் மூலம் பக்தர்கள் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக நேற்று முன்தினம் 67,567 சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இதை பெறுவதன் மூலம் வரும் நவம்பர் மாதம் பக்தர்கள் சுவாமியை தரிசிக்கலாம்.

ஆன்லைன் குலுக்கல் முறையில் மொத்தம் 10,767 டிக்கெட்டுகளும், பொது ஆன்லைன் மூலம் விசேஷ பூஜை 2000, கல்யாண உற்சவம் 12825, ஊஞ்சல் சேவை 4050, ஆர்ஜித பிரம்மோற்சவம் 7425, வசந்தோற்சவம் 14300, சகஸ்ர தீப அலங்கார சேவை 16200 என மொத்தம் 67,567 சேவா டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் நேற்று  முன்தினம் வெளியிடப்பட்டன.

குறை கேட்கும் நிகழ்ச்சி

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று  முன்தினம் காலை தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது தேவஸ்தானம் ஒளிபரப்பும்  வெங்கடேஸ்வரா பக்தி சேனலில், இடையிடையே வரும் விளம்பரங்களை தவிர்க்கும்படி பக்தர்கள் சிலர் கேட்டுக்கொண்டனர். முதியோர், மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு மாதத்தில் 2 நாட்கள் தனி தரிசன ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள் கோரினர்.

இதற்கு நெரிசல் இல்லாத சாதாரண நாட்களில் இவர்கள் வந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அனில் குமார் சிங்கால் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x