Published : 19 Aug 2018 03:50 PM
Last Updated : 19 Aug 2018 03:50 PM
முறையான முன்னெச்சரிக்கை திட்டத்தை உருவாக்க தவறியதே வெள்ளப் பேரழிவிற்கு காரணமாகியுள்ளது, இப்பேரழிவு மனிதன் உருவாக்கியதுதான தானே தவிர இயற்கை அல்ல என்று கேரள அரசை சுட்டிக்காட்டி சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணிய சுவாமி ஏஎன்ஐயிடம் இன்று தெரிவித்ததாவது,
முன்பு ஆட்சிசெய்த காங்கிரஸ் ஊழல் செய்வதில்தான் ஆர்வங்காட்டியதைப்போல இப்போதுள்ள கேரள அரசு வெறும் வார்த்தை ஜாலங்களில்தான் வளர்ச்சி கண்டுள்ளது.
ஒரு போர் ஏற்பட்டாலோ, நிலநடுக்கம் ஏற்பட்டாலோ மாற்று வளர்ச்சிக்கு முன்னெச்சரிக்கை திட்டம் ஏதும் வைத்திருக்காத நிலையில் எந்த ஒழுங்கமைக்கப்பட்ட சமுதாயமும் தொடர்ந்து செயல்படமுடியாது. எந்த பேரழிவுக்குப் பிறகும் வேகமாக பழைய நிலைக்கே நாடு திரும்புவதுதான் நம் சமூகம் எவ்வளவு வலுவாக உள்ளது என்பதைக் காட்டும்.
கேரளாவைப் போன்ற எந்தவொரு பேரழிவும் இதுவரை உலகம் கண்டதில்லை.இது அதிர்ச்சி அளிக்கிறது. மோசமான உள்கட்டமைப்பின் காரணமாக இது நடந்துள்ளது. எல்லாம் உடைந்துவிட்டது. பாலங்கள் இடிந்துவிட்டன.
இந்த பேரழிவுக்குக் காரணம் பினராயி விஜயன் தலைமையிலான கேரள கம்யூனிஸ அரசுதான். இந்த வெள்ளப் பேரழிவை உருவாக்கியது மனிதன்தானே தவிர இயற்கை அல்ல.
உலகெங்கிலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட எந்த வெள்ளப் பெருக்கின்போதும் இவ்வளவு லாயக்கற்ற ஒரு அரசாங்கத்தை நான் பார்த்ததில்லை.
இவ்வாறு ஏஎன்ஐயிடம் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT