Published : 06 Aug 2018 12:41 PM
Last Updated : 06 Aug 2018 12:41 PM
கேரளாவிற்கு வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர் இன்று (திங்கள் கிழமை) கைது செய்யப்பட்டார்.
குடியரசுத் தலைவர் கோவிந்த் தற்போது கேரள சட்டப் பேரவையின் வைரவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியான ஜனநாயகத்தின் திருவிழா என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக திருவனந்தபுரம் வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை திருச்சூரில் உள்ள குருவாயூர் கோயிலுக்கும் அவர் செல்கிறார்.
இந்நிலையில், நேற்று இரவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மிரட்டல் போன் வந்தது. அதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை கொல்லப்போவதாக ஒருவர் மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய, போலீஸார், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, மிரட்டல் விடுத்த நபர் திருச்சூரில் உள்ள சிராக்கல் பகவதி கோயில் பூசாரி என்று கண்டுபிடித்தனர். அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து திரிச்சூர் காவல் கண்காணிப்பாளர், எம்.பி.தினேஷ் தெரிவிக்கையில், ''இந்த கோயில் பூசாரி போன் பேசும்போது, குடிபோதையில் இருந்தார். முன்தினம் நடந்தது அவருக்கு மறந்துவிட்டது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT