Published : 18 Aug 2018 09:22 AM
Last Updated : 18 Aug 2018 09:22 AM

கும்பாபிஷேகத்துக்குப் பின் ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழக்கம்போல் அனுமதி 

மகா கும்பாபிஷேகத்திற்கு பிறகு, நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்,12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பாபிஷேக விழா, நேற்று முன் தினம் விமரிசையாக நடை பெற்றது. கடந்த 11ம் தேதி முதல் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடு களை நேற்று முதல் தேவஸ்தானம் விலக்கி கொண்டது. நேற்று காலை சுவாமிக்கு அபிஷேகம் நடந்த பின்னர், பக்தர்கள் வழக்கம்போல் சர்வ தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் 5 மணி நேரத்திற்குள் சுவாமியை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தனர். இதேபோன்று, மலையேறி வந்த பக்தர்கள் மற்றும் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் வெறும் 2 மணி நேரத்தில் சுவாமியை தரிசித்தாக தெரிவித்தனர்.

மகா கும்பாபிஷேகத்திற்கு பின், நேற்று முதல் சர்வ தரிசனம், திவ்ய தரிசன டோக்கன்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் விநியோகம் செய்தது.

சிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மா நேற்று தனது மனைவியுடன் ஏழுமலயானை தரிசனம் செய்தார். இவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற் றனர். பின்னர் அவர் சுவாமிக்கு நடைபெற்ற அபிஷேக சேவையில் கலந்து கொண்டார். அதன்பின்னர், அவருக்கு ரங்கநாயக மண்டபத் தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதேபோன்று, நேற்று ஆந்திர மாநில நிதித்துறை அமைச்சர் யனமல ராமகிருஷ்ணுடு ஏழு மலையானை தரிசித்தார். இவ ருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்ததோடு, தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x