Published : 14 Aug 2018 05:38 PM
Last Updated : 14 Aug 2018 05:38 PM
ஒரே நாடு ஒரே தேர்தல் சரியான கோட்பாடு. ஆனால் வரும் பொதுத் தேர்தலில் அதை நடைமுறைபடுத்த முடியாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று தெரிவித்தார்.
செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசியபோது பீகார் முதல்வர் நிதிஷ் குமார், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலின்போது, அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களையும் ஒன்றாக நடத்தலாம். கோட்பாட்டளவில் அது சரிதான். ஆனால் அதை நடைமுறைப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.
நிதிஷ்குமார், பீகார் மாநிலத்தில் பாஜக- ஒருங்கிணைந்த ஜனதா தள கூட்டணி ஆட்சிக்கு தலைமையேற்று முதல்வராக உள்ளார். பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா, விரிவான கடிதத்தை தேசிய சட்ட ஆணையத் தலைவரிடம் நேற்று அளித்ததார்.
அமித்ஷா தனது கடிதத்தில், நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது ஜனநாயகக் கட்டமைப்பை பலப்படுத்துவதாகவும், இத்தலைப்புக்கு நாட்டில் ஆக்கபூர்வமான விவாதம் தேவை என்றும் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்ததாவது:
''இந்தியாவில் 29 மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தலையும் வைப்பதென்பது சாத்தியமில்லை.
அரசியலமைப்பிலும் சட்டத் திருத்தம் கொண்டுவராமல் இதை நடத்த முடியாது'' என்று தெரிவத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT