Published : 07 Apr 2014 01:16 PM
Last Updated : 07 Apr 2014 01:16 PM
நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவர் பிரதீப்குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன் பிரதீப்குமார் தரப்பு வழக்கறிஞர் அனில் திவான் ஆஜராகி இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "ஜனவரி 2003-ல் இருந்து அக்டோபர் 2006 வரை பிரதீப்குமார் நிலக்கசி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக இருந்தார். இதன் காரணமாகவே வழக்கு விசாரணையில் இருந்து அவர் விலக்கு கோருகிறார்" என்றார்.
நிலக்கசிச் சுரங்க ஊழல் வழக்கு கடைசியாக விசாரணைக்கு வந்த போது, விசாரணை அதிகாரிகள் அளித்த தகவலிலும் சிபிஐ அளித்த தகவலிலும் முரண் இருந்ததால், ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவர் முதற்கட்ட விசாரணையை மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT