Published : 10 Aug 2018 08:41 AM
Last Updated : 10 Aug 2018 08:41 AM
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்ற 5 திரையரங்குகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சத்தை அபராதமாக விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜயவாடாவில் உள்ள சில திரையரங்குகளில் (மல்டி ஃப்ளக்ஸ்) அதிக விலைக்கு சினிமா டிக்கெட்டுகள் விற்பது மட்டுமின்றி, குடிநீர் மற்றும் உணவுப்பொருட்களும் மிக அதிக விலைக்கு விற்பனை செய் யப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ‘மார்கதர்சி’ என்ற அறக்கட்டளை சார்பில் விஜயவாடா நுகர்வோர் நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி மாதவ ராவ் முன்னிலையில் நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, அதிக விலைக்கு உணவுப்பொருட் கள், குடிநீரை விற்பனை செய்த தாக குற்றம் சாட்டப்பட்ட 5 திரையரங்குகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், உணவுப்பொருட்களை எம்.ஆர்.பி. விலையிலேயே விற் பனை செய்ய வேண்டும் என்றும், பொதுமக்கள் கொண்டு வரும் குளிர்பானங்கள், குடிநீர், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை திரை யரங்குகளில் அனுமதிக்க வேண் டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்தத் தீர்ப் பின் எதிரொலியாக, விஜயவாடா வில் உள்ள திரையரங்குகளில் நேற்று முதல் உணவுப்பொருட் களின் விலை கணிசமாக குறைக் கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT