Last Updated : 27 Aug, 2018 04:59 PM

 

Published : 27 Aug 2018 04:59 PM
Last Updated : 27 Aug 2018 04:59 PM

பணி நேரத்தில் கடமை தவறிய ராணுவ மேஜர் மீது ஒழுங்கு நடவடிக்கை: விடுதியில் பெண்ணுடன் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் மீது உத்தரவு

எல்லையில் பாதுகாப்புப் பணியில் இல்லாமல் கடமை தவறியதாகக் குற்றம் சாட்டபட்ட ராணுவ மேஜர் ஒருவர் பணி நேரத்தில் பெண்ணுடன் ஹோட்டலில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊடுருவும் தீவிரவாதிகளைப் பிடிக்கும் ஆபரேஷனில் கடந்த மே மாதம் மேஜர் லீதுல் கோகாய்க்கு பணி அளிக்கப்பட்டிருந்தது.  ஆனால் அவரோ அச்சமயம் ஸ்ரீநகர் ஹோட்டலில் ஒரு பெண்ணுடன் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஒரு உள்ளூர் பெண்ணுடன் ஹோட்டலில் தங்கியிருந்ததன் மூலம் ராணுவ விதிமுரை களை மீறியதாகவும், பணச் சமயத்தில் மேஜர் தனது கடமையிலிருந்து தவறி விட்டதாகவும், ராணுவ நடவடிக்கைப் பணி ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் செல்லாமல் தன் விருப்பப்படி இருந்ததற்காகவும் அவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

எல்லைப் பகுதியில் நடைபெறும் சிறப்பு ஆபரேஷனுக்கு செல்லாமல் ஸ்ரீநகர் விடுதியில் ஒரு பெண்ணுடன் இருந்ததையடுத்து மேஜர் கோகாய் மே 23ம் தேதி கைது செய்யப்பட்டார்.

கோகோய் பெண்மணியுடன் ஹோட்டலுக்குள் நுழைய முயன்றபோது ஊழியர்கள் அவர்களை ஹோட்டலுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுவது குறித்து மேஜர் கோகாயுடன் வினவியபோது அங்கு வாக்குவாதம் வெடித்தது.

மே 26 அன்று ராணுவத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் கூறுகையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் மேஜர் கோகாய் மீது 'முன்மாதிரியான தண்டனை' வழங்கப்படும் என்றார்.

மேஜர் கோகாய், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பட்காமில் ஒரு சிவிலியனை ஒரு மனிதக் கேடயமாக தனது காரின் முன்பக்கம் கட்டி தனது வாகனத்தை ஓட்டிச்சென்றதன் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x