Published : 01 Aug 2018 08:10 AM
Last Updated : 01 Aug 2018 08:10 AM
திருப்பதி ஏழுமலையான் கோயிலை போலவே, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் இன்று முதல் விஐபி பிரேக் தரிசன முறை அமல்படுத்தப்பட உள்ளது.
அலர்மேலு மங்காபுரம் என்றழைக்கப்படும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் இன்று (ஆகஸ்ட் 1) முதல், விஐபி பிரேக் தரிசன முறை அமல்படுத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன்படி, தினமும் காலை 11.30 மணி முதல் 12 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தாயாரை தரிசிக்கலாம். காலை விஐபி பிரேக் தரிசனத்துக்கு காலை 8 மணிக்கும், இரவு தரிசனத்துக்கு மதியம் 3 மணிக்கும் கோயிலில் ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பக்தர், ரூ.250 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும்.
வழக்கம்போல தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 4.30 மணி வரை தாயாருக்கு குங்குமார்ச்சனை நடைபெறும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். விஐபி பிரேக் தரிசனத்தையொட்டி, இன்று முதல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், அரை மணி நேரம் முன்னதாக, அதாவது காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT