Last Updated : 18 Aug, 2018 08:44 PM

 

Published : 18 Aug 2018 08:44 PM
Last Updated : 18 Aug 2018 08:44 PM

கேரளாவின் அழிவு நிலைக்கு காரணம் என்ன?: அன்றே எச்சரித்த நிபுணர்கள், கண்டுகொள்ளாத அரசுகள்

கேரள மாநிலம் மழையாலும், வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிப்பு வரும் என்று அன்றே நிபுணர்கள்எச்சரித்தை நிலையில், அதைக் கண்டுகொள்ளாத அரசுகளால் இந்த நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு முன்கூட்டியே மே 29-ம் தேதி தொடங்கியது. ஆனால், மழை தொடங்கும் போது அதைக் கேரள மக்கள் மகிழ்ச்சியாகத்தான் வரவேற்றார்கள், ஓணத்துக்கு முந்தைய மழையை மிகவும் உற்சாகத்துடன் எதிர்நோக்கினார்கள்.

ஆனால், கடந்த 10-ம் தேதி முதல் கொட்டித் தீர்த்துவரும் பெருமழையைக் கண்டு தற்போது அச்சத்தில்உறைந்து போயுள்ளார்கள். இரண்டு தலைமுறையைச் சேர்ந்த மக்கள் நூற்றாண்டுகளில் பார்த்திருக்கமுடியாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது.

219 செ.மீ மழை

தென் மேற்கு பருவமழை தொடங்கியபின், வழக்கத்தைக் காட்டிலும் கேரளாவில் 30 சதவீதம் அதிகமாகப்பெய்துள்ளது. கடந்த 16-ம் தேதி நிலவரப்படி 219 செ.மீ மழை கேரளத்தில் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுஆகஸ்ட் மாதம் இதே காலகட்டத்தில் கேரளாவில் 1,606 மி.மீ மழை மட்டுமே பதிவாகி இருந்தது. ஆனால், இப்போது, அதைக்காட்டிலும் 30 சதவீதம் அதிகமான மழை பதிவாகி இருக்கிறது. இன்னும் தென்மேற்குபருவமழை காலம் முடிய செப்டம்பர் மாதம் வரை இருக்கிறது கவனிக்கத்தக்கது.

இடுக்கி மாவட்டத்தில் மட்டும் வழக்கத்தைக் காட்டிலும் 70 சதவீதம் கூடுதலாக இந்த ஆண்டு மழைபெய்துள்ளது அதேபோல மலப்புரம் மற்றும் கோட்டயம் மாவட்டத்திலும் இந்த ஆண்டு வழக்கத்துக்குமாறாக 41 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. எர்ணாகுளத்தில் 90 ஆண்டுகளுக்குப்பின் 21 சதவீதம்அதிகமாக மழை பெய்துள்ளது.

3.5 மடங்கு

14 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் பெய்த மழை வழக்கத்தைக் காட்டிலும் 10 மடங்கு அதிகம் என்கிறதுஇந்திய வானிலை மையம். அதிலும், கடந்த 8ம் தேதி முதல் 15-ம் தேதிவரை மாநிலத்தில் பெய்த மழைவழக்கத்தைக் காட்டிலும் 3.5 மடங்கு அதிகமாகப் பெய்துள்ளது.

இந்த அளவுக்கு மழை அதிகமாகப் பெய்ததற்கு ஒடிசா கடற்கரைக்கு அருகே இரு குறைந்த காற்றழுத்ததாழ்வுப்பகுதி உருவானது காரணம். இதன் காரணமாக மழை கொட்டித் தீர்த்தது என்று இந்திய வானிலைமையம் தெரிவிக்கிறது.

ரூ.19ஆயிரம் கோடி இழப்பு

இந்த மழையினால், ஏறக்குறைய 10 ஆயிரம் கி.மீ. சாலை உருக்குலைந்து சேதமடைந்துள்ளது. 444 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளப்பாதிப்பின்மதிப்பு ரூ.19,500 கோடி என்று கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்ததற்கும், அந்த மழையால் கடுமையான சேதம்ஏற்பட்டதற்கும் சூழியல் மோசமடைந்ததும், சுற்றுச்சூழல் கொள்கைகளையும் முறையாகக் கையாளாமல்விட்டதுமே காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

காரணம் என்ன?

கேரளா, தமிழகம், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியபகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் வருகிறது. மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இந்தமலைப்பகுதியில் மனிதர்களின் பேராசை, பணம் ஈட்டும் நோக்கம், வர்த்தக நோக்கத்தில் இயற்கையைசூறையாடியதன் விளைவுதான் இன்று கேரளாவில் நிலச்சரிவு, பெருவெள்ளம் போன்ற மிகப்பெரியஇயற்கை சீற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது.

கட்கில் குழு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியைப் பாதுகாப்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக சுற்றுச்சூழல் ஆர்வலரும், விஞ்ஞானியுமான மாதவ் கட்கில் தலைமையில் குழு அமைத்தது.

கட்கில் தலைமையிலான ஆணையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஆய்வு செய்து கடந்த 2011-ம்ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் மேற்குதொடர்ச்சி மலையைப் பாதுகாப்பது தொடர்பான பல்வேறு பரிந்துரைகளையும், கடைப்பிடிக்க வேண்டிய கடினமான விதிமுறைகளையும் வகுத்திருந்தது.

அந்த அறிக்கையில், 1.40 லட்சம் கி.மீ கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையை கட்கில் ஆணையம் 3 பிரிவுகளைப் பிரித்து ஒவ்வொரு பிரிவுகளையும் எப்படி பாதுகாக்க வேண்டும், எந்தெந்த இடம் எதற்குமுக்கியத்துவம் வாய்ந்தது, எந்தப் பணிகளைச் செய்யலாம், எந்த பகுதியில் மட்டும் மக்கள் வசிக்கலாம்என்பதைப் பட்டியலிட்டது.

தடை

குறிப்பாக வளங்களை அழித்து, சுரங்கம் தோண்டுவது, கல்குவாரிகளை அமைப்பது, மரங்களை அழித்துபெரிய கட்டிடங்களைக் கட்டுவது, ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் அமைப்பது போன்றவற்றுக்கு கடும்கட்டுப்பாடுகளை விதித்தது. ஏறக்குறைய 64 சதவீத பகுதிகளை மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அந்தஆணையம் அறிவித்தது

எதிர்ப்பு

ஆனால், இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த அப்போது கேரளாவில் ஆட்சியி்ல இருந்த காங்கிரஸ்அரசு கடுமையாக எதிர்த்தது. அதிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசித்து வந்த ஒரு குறிப்பிட்டமதத்தைச் சேர்ந்த மக்கள் கடுமையாக எதிர்த்தனர், தங்களின் வாழ்விடம் பாழாகிடும், விவசாயம்பாதிக்கும் என எதிர்ப்புத் தெரிவித்தனர். கேரளாவில் உள்ள வயநாடு பகுதியைச் சேர்ந்த மக்களும்எதிர்த்தனர்.

மக்களின் நலனுக்கு விரோதமாகவும், களச்சூழலையும் புரிந்து கொள்ளாமல், முற்றிலும் இயற்கைக்குச்சார்பான முறையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று விமர்சிக்கப்பட்டது.

கஸ்தூரிரங்கன் குழு

இதையடுத்து இந்த அறிக்கையை ஆய்வு செய்ய இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன்தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அவர் தலைமையிலான குழு, மேற்குதொடர்ச்சி மலையில் 64 சதவீத பாதுகாக்கப்பட்ட பகுதிகளை 34 சதவீதமாகக் குறைத்தார்.

கேரள, தமிழகம், குஜராத், உள்ளிட்ட 6 மாநிலங்களில் வரும் மேற்குதொடர்ச்சி மலையில் 60 ஆயிரம் கி.மீபகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தார்.

ஆனால்,கட்கில் ஆணையம் அறிவித்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் அளவைக் கஸ்தூரி ரங்கன்தலைமையிலானகுழு குறைத்தபோதிலும் கூட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மக்கள்தொடர்ந்து எதிர்த்தனர், கஸ்தூரி ரங்கன் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்றனர்.

கட்கில் ஆணையத்தில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் கஸ்தூரி ரங்கனின் அறிக்கைஜனநாயகத்துக்கு விரோதமானது, சுற்றுச்சூழலுக்கு விரோதமானது என்று விமர்சித்தனர். இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் எதுவும்நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

கட்கில் அறிக்கையைச் செயல்படுத்தி இருந்தால், தற்போது இந்த அளவுக்கு கேரளாவில் நிலச்சரிவும், பெருமழை வெள்ளமும் ஏற்பட்டு இருப்பதைக் குறைத்திருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்கூறுகிறார்கள்.

மனிதத்தவறுகளே காரணம்

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு வெள்ளம் குறித்து கட்கலிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், “ பொறுப்பற்றதனத்தோடு அனைத்துச் சுற்றுச்சூழல் கொள்கைகளையும் கையாண்டால் இப்படித்தான் நேரும். இந்த பாதிப்புகள் அனைத்தும் இயற்கையில் ஏற்பட்டவை அல்ல. மனிதத்தவறுகளேஅனைத்துக்கும் காரணம்.

மனிதர்களின் பேராசை, வனங்களையும், இயற்கைகயையும் அழித்ததே காரணம். அதிலும் குறிப்பாகக் குவாரிகளை வனப்பகுதிகளில் செயல்படுத்தியதே நிலச்சரிவுக்கும், மலைப்பகுதியில் மண் சரிவுக்கும்காரணம்”தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் கல்குவாரிகளையும், மண்குவாரிகளையும்செயல்பட அனுமதித்ததும், பணம் ஈட்டும் நோக்கத்துடனும், வர்த்தக நோக்கிலும் வனங்களையும், இயற்கையையும் அழித்து ஹோட்டல்களையும், ரிசார்ட்களையும் கட்டியதும் சூழல் கெடுவதற்கும், இத்தகைய பேரழிவு ஏற்படுவற்கு முக்கியக் காரணமாகும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்தெரிவிக்கின்றனர்.

இயற்கை ஆர்வலர்களும், சூழலியல் வல்லுநர்களும் கூறிய அறிவுரைகளையும், ஆலோசனைகளையும்புறந்தள்ளி செயல்பட்டதன் விளைவை இப்போது கேரள மாநிலம்அனுபவித்து வருகிறது. இனிமேலாவதுகட்கில் அறிக்கையைப் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு கேரள தள்ளப்படலாம்.

விழிக்குமா தமிழகம் ?

கேரள மாநிலத்துக்கு வந்த நிலைமை தமிழகத்துக்கும் வராது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும்இல்லை. ஏனென்றால், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்திருக்கும் தேனி, நெல்லை, கோவை, நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் கனமழை பெய்தால் நிலச்சரிவுஏற்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆதலால், தமிழகத்தில் உள்ள சுற்றுச்சூழல்ஆர்வலர்கள் கூறும் நல்ல கருத்துக்களை ஏற்று அரசு செயல்படுவது சிறப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x