Last Updated : 01 Aug, 2018 11:26 AM

 

Published : 01 Aug 2018 11:26 AM
Last Updated : 01 Aug 2018 11:26 AM

குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி திருமணம்: தம்பதியரை சிறுநீர் குடிக்க வைத்து கொடுமைப்படுத்திய உறவினர்கள்

குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள், புதுமணத் தம்பதியரை கடத்திச் சென்று சிறுநீர் குடிக்குமாறு நிர்பந்தம் செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசதத்தில் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ஹர்தாஸ்பூரில், குடும்பத்தினரை எதிர்த்து ஒரு இளம்ஜோடி காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்த புதுமணத் தம்பதியருக்கு அவரது குடும்பத்தினரே அதிர்ச்சியூட்டும் வன்முறையை செய்துள்ளனர்.

திருமணம் ஆகி ஓரிரு தினங்கள் கூட ஆகாத நிலையில் நேற்று அவர்கள் கடத்தப்பட்டனர். பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை கடத்திச் சென்றனர்.

மணப் பெண்ணின் அலங்காரம் முழுவதும் கலைக்கப்பட்டது. அப்பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டது. இளம் ஜோடி இருவரையும் சிறுநீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

போலீஸாருக்கு தகவல் தெரிந்ததும் அவர்கள் விரைந்து வந்து இளந்தம்பதிகளுக்கு கொடுமை செய்த ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக செயல்பட்டுள்ள இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x