Published : 14 Aug 2018 07:54 AM
Last Updated : 14 Aug 2018 07:54 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேக விழாவில் பக்தர் களின் வருகை மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதனால், உண்டியல் வருவாயும் குறைந்தது. பக்தர்கள் இன்றி, அன்னதான மையமும் வெறிச்சோடி காணப் படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 12-ம் தேதி முதல், வரும் 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்திற்கான யாக பூஜைகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்க தினமும் குறைவான பக்தர்களுக்கு மட்டுமே தரிசன ஏற்பாடு என தேவஸ்தானம் அறிவித்தது. கடந்த 11-ம் தேதி அங்குரார்பண நிகழ்ச்சிகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக பணிகள் தொடங்கின. 2-ம் நாளான நேற்றும் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன.
குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே சர்வ தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் அறிவித்ததால், திருமலைக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைந்தது. இதனால் திருமலையில் உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. அலிபிரி - திருமலை இடையே பஸ் போக்குவரத்தும் குறைக்கப்பட் டது. தலைமுடி காணிக்கை செலுத்துமிடம், லட்டு பிரசாதம் விநியோக மையம், தரிசன வரிசை கள், தங்கும் அறை வழங்கும் மையங்களிலும் பக்தர்கள் குறைந்து வெறிச்சோடுகிறது. திரு மலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பாள் அன்னதான மையத்தில் மிக குறைவான பக்தர் கள் மட்டுமே இலவச உணவை சாப்பிடுகின்றனர். பக்தர்கள் அதிகம் வராததால் இலைகள் போடப்பட்டு, பக்தர்களுக்காக ஊழியர்கள் காத்திருக்கும் சூழ் நிலை உருவாகி உள்ளது. மகா கும்பாபிஷேகத்தையொட்டி, திருமலைக்கு பக்தர்களின் வருகை குறைந்ததால், உண்டியல் வருமானமும் குறைந்தது. ஒரு நாளைக்கு சராசரியாக உண்டியல் வருவாய் ரூ.3 கோடி இருக்கும். தற்போது பக்தர்களின் வருகை குறைந்ததால், நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழுமலை யானின் உண்டியல் வருமானம் ரூ.73 லட்சமாக குறைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT