Last Updated : 23 Aug, 2018 03:31 PM

 

Published : 23 Aug 2018 03:31 PM
Last Updated : 23 Aug 2018 03:31 PM

பள்ளிக்கூடத்திற்கு தினமும் 8 கி.மீ. காட்டுப்பகுதியைக் குழந்தைகள் கடந்துசெல்லும அவலம்: ‘டிஜிட்டல் இந்தியா’வில் புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் சோகம்

72 வருட சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட, நாட்டில் இன்னும் சிலர் பள்ளிக்கூடம் செல்லும் ஒரு எளிமையான பணி பெரும்போராட்டமாக இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் பாலராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாணவர்களின் நிலை இதுதான்.

முறையான சாலைகள் இல்லாததால் மாணவர்கள் அருகில் உள்ள கிராமமான கோல்டியில் உள்ள தங்கள் பள்ளிக்கு தினமும் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இவர்களது கிராமத்திலோ அருகில் வேறு எங்கிலுமோ கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லை என்பதுதான் இதில் உள்ள சோகம். இதனைத் தாண்டி வேறு எங்காவது சென்று படிக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. இப்படியொரு சவாலை இவர்கள் சந்திக்க விரும்பினாலும் மாறும் வானிலையின் தீவிரம் பல நேரங்களில் இவர்களோடு விளையாடத் தொடங்கிவிடுகிறது.

ஒரு மாணவர் இதுகுறித்து தெரிவிக்கையில்,

''நாங்கள் ஒவ்வொரு நாளும் ஆற்றையும் காட்டையும் கடந்துசென்றுதான் பள்ளியை அடைகிறோம். ஆனால் அது எங்களுக்கு எவ்வகையிலும் பாதுகாப்பானதல்ல. மழையின்போது, பள்ளிக்கூடம் செல்வது மிகவும் சிரமமான காரியமாக மாறிவிடுகிறது. '' என்றார்.

மாணவர்களைத் தவிர, சரியான சாலை வசதி இன்றி அவதிப்பட்டு வரும் உள்ளூர்வாசிகள் இதுகுறித்து தெரிவிக்கையில்,

தேர்வு நேரத்தில் மட்டும் தலையைக் காட்டும் அமைச்சர்கள், பொய்யான வாக்குறுதிகளை தருகின்றனர். ஆனால் அதெல்லாம் ஓட்டுக்காகத்தான். பின்னர் அதை அவர்களே மறந்துவிடுகின்றனர். அமைச்சர்களால் ஒருகாலத்திலும் எங்களுக்கு எந்த நன்மையும் கிடைத்ததில்லை.''

எனினும், சங்கரா மாவட்டத்திலிருந்து ஓர் உயரதிகாரி, ''கிராம மக்கள் எதிர்கொண்டு வரும் சிரமத்தை ஓரளவுக்காவது குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

இக்கிராமம் எந்தவித வளர்ச்சியுமின்றி பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கின்றனர்.

அந்த வருத்தம் மெல்ல மெல்ல வளர்ந்து, தங்கள் குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் தினமும் பள்ளிசென்றுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நிறைய கேள்விகளை எழுப்பும் சூழ்நிலை தற்போது உருவாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x