Published : 28 Aug 2018 08:19 AM
Last Updated : 28 Aug 2018 08:19 AM

ஸ்டாலினை தமிழக முதல்வராக பார்க்க ஆசை: நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் மோகன்பாபு கருத்து

திமுக தலைவராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினை தமிழக முதல்வ ராக பார்க்க ஆசைப்படுவதாக பிரபல தெலுங்கு நடிகரும், ரஜினி காந்தின் நண்பருமான மோகன்பாபு கூறியுள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்து நிகழ்ச்சி கோவையில் திமுக சார்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திரைத்துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு கருணாநிதியின் நினைவுகளையும், அவர் திரையுலகுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்தும் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில், பிரபல தெலுங்கு நடிகரும், ரஜினிகாந்தின் 40 ஆண்டுகால நெருங்கிய நண்பருமான மோகன்பாபுவும் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர், இதுகுறித்து அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கருணாநிதியின் நினைவஞ் சலிக்கு என்னை அழைத்ததற்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலி னுக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறேன். இனி வரும் நாட்களில், ஸ்டாலினுக்கு நன்மையே நடக்க வேண்டும் என விரும்புகிறேன். விரைவில் உங்களை (ஸ்டாலின்) முதல்வராக பார்க்க ஆசைப்படு கிறேன் என தனது பதிவில் மோகன் பாபு தெரிவித்துள்ளார்.

மோகன்பாபுவின் இந்த வாழ்த்துச் செய்தி, தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா துறை யில் காலூன்றுவதற்கு முன்பா கவே, ரஜினிக்கும், மோகன் பாபு வுக்கும் நட்பு உள்ளது. இந்த நட்பு சுமார் 40 ஆண்டுகளாக நீடிக்கிறது.

ரஜினி தற்போது அரசியலில் இறங்குவதாக அறிவித்துள்ளார். விரைவில் கட்சி தொடங்கி, வரும் தேர்தலில் களத்தில் ரஜினி இறங்குவார் என அவரது ரசிகர் கள் பெரிதும் எதிர்ப்பார்த்துள்ளனர். இந்த சூழ்நிலையில், அவரது நெருங்கிய நண்பரான மோகன் பாபு, ஸ்டாலினை, முதல்வராக பார்க்க ஆசைப்படுவதாக செய்த ட்வீட், ரஜினி ரசிகர்களை அதிருப்தி யடையச் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x