Published : 29 Aug 2018 07:31 AM
Last Updated : 29 Aug 2018 07:31 AM

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் ரூ. 150 கோடியில் ஏழுமலையான் கோயில்: அறங்காவலர் குழுவில் தீர்மானம்

ஆந்திர மாநில தலைநகரான அமராவதியில், ஏழுமலையான் கோயில் கட்ட ரூ. 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவ லர் குழு தீர்மானித்துள்ளது.

திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் நேற்று, அறங் காவலர் குழு தலைவர் புட்டா சுதா கர் யாதவ் தலைமையில், அறங் காவலர் குழு கூட்டம் நடைபெற் றது. இதில் தேவஸ்தான வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விவாதிக் கப்பட்டன. பின்னர், செய்தியாளர் களிடம் புட்டா சுதாகர் யாதவ் கூறியதாவது:

12 ஆண்டுகளுக்கு பின்னர் நடை பெற்ற ஏழுமலையான் கோயில் மகா கும்பாபிஷேக விழாவுக்கு ஒத்துழைத்த பக்தர்களுக்கு என்னு டைய நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன். அமராவதியில் உள்ள தூளூரு மண்டலம், வெங்கட பாளையம் பகுதியில் ஏழுமலை யான் கோயில் கட்டப்படும். இதற் காக முதற்கட்டமாக ரூ. 150 கோடி நிதி வழங்கப்படும். பக்தர்களின் வசதிக்காக திருமலையில், தற்போதுள்ள கோவர்தன விடுதி அருகே மேலும் ஒரு விடுதி கட்டப்படும். இதற்காக ரூ. 79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையானின் மகிமைகளை தெரிந்து கொள்ளும் வகையில், தேவஸ்தானம் அச்சடித்த 2,200 புத்தகங்கள், ஆந்திராவில் உள்ள 142 நூலகங்களுக்கும் விநியோ கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள் ளது. தேவஸ்தான போக்குவரத்து துறையில் பணியாற்றும் வாகன ஓட்டுநர்கள், கிளீனர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

திருமலையில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், டீ கடைகளில், தர மான பொருட்கள் நியாயமான விலைக்கு விற்கப்படுகிறதா என் பதை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது. இந்த கமிட்டி ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும். அதன்படி தக்க நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆந்திர மாநிலத்தில் உள்ள தேவஸ் தான திருமண மண்டபங்களின் மராமத்து பணிகளுக்கு ரூ. 37.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு புட்டா சுதாகர் யாதவ் தெரிவித் தார். இந்த அறங்காவர் குழு கூட் டத்தில், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால், இந்து சமய அறநிலை துறை மாநில முக்கிய செயலாளர் மன்மோகன் சிங், ஆணையர் பத்மா, மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான உயர் அதிகாரிகள் பலர் பங் கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x