Last Updated : 27 Aug, 2018 12:57 PM

 

Published : 27 Aug 2018 12:57 PM
Last Updated : 27 Aug 2018 12:57 PM

நவீன விவசாயத் தொழில்நுட்பத்தை அறிந்துவர ஜார்க்கண்ட் விவசாயிகள் இஸ்ரேல் பயணம்

இஸ்ரேலுக்குச்  சென்று நவீன விவசாய தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்காக ஜார்கண்ட் விவசாயப் பிரதிநிதிகள் 26 பேரை அம்மாநில முதல்வர் ரகுவர் தாஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழியனுப்பி வைத்தார்.

ஜார்க்கண்டில் பாசன வசதி இல்லாத பகுதிகள் அதிகம் என்பதால் அங்குள்ள விவசாயிகள், சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது, மேலும் இஸ்ரேலிலும் இப்பிரச்சினை மிகப்பெரிய அளவில் உள்ளது. ஆனால் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்துள்ளார். இதனால் அங்கு விவசாயத்தை, வெற்றியடைந்த தொழிலாக மாற்றிக்காட்டியிருக்கிறார்கள்.

இதுகுறித்து முதல்வர் தாஸ் தெரிவித்ததாவது:

தற்போது விவசாயிகள், நீர்ப்பாசன வசதியின்றி பெரிய சவாலை சந்தித்து வருகிறார்கள். மேலும், விவசாயத்திற்கான நிலமும் பற்றாக்குறையாக உள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரு வருடத்தில் ஒரு பயிர் மட்டுமே பயிரிடும் நிலையே உள்ளது.

இஸ்ரேல் நாட்டில் இதேபோன்ற பிரச்சினைகள் உள்ளன. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி இப் பிரச்சினைகளை அந்நாட்டு மக்கள் சமாளித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டிலிலிருந்து பயிற்சி பெற்று திரும்பும் விவசாயிகள், மற்ற விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான மாஸ்டர் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு ஹைடெக் பண்ணைய தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவை வழங்கும் பொறுப்புகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

உலகம் முழுவதிலுமிருந்து விவசாய ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள் ஆகியோர் கலந்துகொள்ளும் 'மொமெண்ட்டும் ஜார்க்கண்ட்' என்ற ஒரு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் மாநிலத்தில் உள்ள விவசாயிகளும் கலந்துகொள்வார்கள்.

கருத்துப் பரிமாற்றங்களுக்கு இது ஒரு வழி. சிறந்த உற்பத்திக்கு புதுமையான விவசாய நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இதில் பேசப்படும்.

இதனால் வரும் 2022ம் ஆண்டுக்குள் நவீன விவசாயத்தில் நமது விவசாயிகளும் மேம்பட்ட நிலையில் இருப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக அளித்த வாக்குறுதியும் நிறைவேறும்.

இன்றுவரை, உணவு வழங்குதலில் மற்ற மாநிலத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலையே ஜார்க்கண்ட்டுக்கு உள்ளது. இதில் ஜார்க்கண்ட் தன்னிறைவு பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

இவ்வாறு ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு பயிற்சி மேற்கொள்ள செல்லும் விவசாயிகளில் ஒருவர் கூறுகையில்,‘‘நமது இந்திய நாட்டிற்காகவும் சேர்த்துதான் விவசாய பயிற்சி பெற்றுவர ஜார்க்கண்ட் முன்னே செல்கிறது. அந்நாட்டவர் அனுபவங்களை பெற்று திரும்புவோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x